வடமாகாணசபையிலிருந்து ஓரங்கட்டப்படுகின்றாரா முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்!
வடமாகாணசபையின் அன்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்குகின்ற பொழுது வடமாகாண சபைக்குள்ளேயும், அதன் வெளியேயும் முறுகல் நிலை தோற்றுவிக்கப்பட்டிருந்தது. பிரதி அவைத்தலைவராகச் செயற்பட்டு வந்த மறைந்த அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனின் இடத்திற்கு யாரைத் தெரிவு செய்வது என்று இருந்த நிலையில் இன்று (27.10.2016) வல்லிபுரம் கமலேஸ்வரன் பிரதி அவைத்தலைவராக வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் நாட்டில் இல்லாத நேரம் தமிழரசுக் கட்சியின் தலைமையானது இவ்வாறு பிரதி அவைத் தலைவரை தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமையானது அவர் முகத்தில் செருப்பால் அடித்தது போல் ஒரு காரியத்தை செய்து முடித்துவிட்டது எனலாம்.
வடமாகாணசபையில் முதலமைச்சரின் தவறுகள் என்ன?
1. மக்கள் வாக்கெடுப்பாக இருக்கலாம் , அவை உறுப்பினர்களின் அங்கிகாரமாக இருக்கலாம் , அமைச்சர்களின் முடிவாக இருக்கலாம், அவை அணைத்திற்கும் அப்பாற்பட்டு தான் எடுப்பதே இறுதி முடிவு என்று தன்னிச்சையான முடிவுகளை எடுப்பது
2. அதிகார துஷ்பிரயோகங்களை எந்த இடத்தில் பாவிப்பது என்று தெரியாமல் நிதானமற்றுச் செயற்படுவது.
3. தமிழரசுக் கட்சியினுடைய கொள்கைகளுக்கும், அதன் கட்டுப்பாடுகளுக்கும் மீறி செயற்படுவது.
4. தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராக இருந்து செயற்படுவது.
5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பிளவு படுத்தும் சதித்திட்டத்தில் ஈடுபடுவது.
6. வடமாகாணசபையில் அமைச்சரவை உழல்களை விசாரிப்பது என்ற போர்வையில் அமைச்சர் டெனீஸ்வரன், அமைச்சர் சத்தியலிங்கம் போன்றவர்களைக் குறிவைப்பது.
7. அரசாங்கத்துக்கு தான் எதிரானவர் என்று வெளியே காண்பித்து அவரது சகலனான வாசுதேவ நானயக்காரவுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கவிருக்கும் தீர்வுத்திட்டத்தினை குழப்பியடிப்பது.
8. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய அரசியலை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொள்வது.
9. தமிழரசுக் கட்சியினுடைய செயற்பாடுகளை முடக்கி தானே தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் தெரிவு செய்யப்படவேண்டும் என்ற நட்பாசையுடன் ஆயுதக்கட்சிகளுடன் இணைந்து தமிழரசுக் கட்சிக்கு குழிபறிக்க நினைப்பது.
இவ்வாறு தனது அதிகாரத் துஷ்பிரயோகத்தினை தமிழரசுக் கட்சியினுடைய ஒரு அங்கத்துவமாக இருந்து கொண்டு செயற்பட்டு வருகின்றமையே வடமாகாண சபையில் இருந்து முதலமைச்சர் ஓரங்கட்டப்படுவதற்கான ஆரம்பச் செயற்பாடாக அமைந்துள்ளது.
சம்பந்தன் சிங்கங்கொடி ஏற்றினது தவறு என்றால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சிங்கக்கொடி ஏற்றியதும் தவறே! லண்டனில் புலிக்கொடி ஏற்ற மறுத்த முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடைய இரட்டை நாடகம் இதிலிருந்து புலப்படுகின்றது. ஒரு கட்டத்தில் அயுதக்குழுக்களுடன் இணைந்து தான் பணியாற்ற முடியாது என்று ஆயுதக்கட்சிகள் முன்னிலையில் வைத்தே வடமாகாணசபையில் குறிப்பிட்டிருந்தார். இவ்விடயமானது ஆயுதக்கட்சிகளுக்கு முகத்தில் கரி பூசினாலும் மீண்டும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனே தஞ்சம் என்று அவர் பாதத்தில் சரணாகதி அடைந்துள்ளனர்.
இவ்வாறு இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சீர்குழைத்து தான் தமிழ் மக்களின் தலைவனாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக, தமிழரசுக் கட்சியன் தலைவராக வரவேண்டும் என்று நினைத்து தனது குப்பாடி அரசியலைத் தற்பொழுது நடாத்தி வருகின்றார். இவை அணைத்திற்கும் படம் கற்பிக்கும் வகையிலேயே இன்று வடமாகாண சபையில் பிரதி அவைத்தலைவர் தெரிவு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு விடயங்களிலும் முதலமைச்சரை ஓரங்கட்டி தமிழ், இனத்திற்குள்ளே பிரிவினைகளை ஏற்படுத்தாது தற்பொழுது சமதான முன்னெடுப்புக்களை தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு தமிழரசுக் கட்சித் தலைமைகள் தமது முடிவுகளையும், அரசியல் தந்திரஉபாய நடடிக்கைகளையும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நடத்தியுள்ளனர். அதனுடைய முதலாவது கட்ட நகர்வே வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவராக வல்லிபுரம் கமலேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டமையே ஆகும்.