வாஷிங்டன்: வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் உச்சக்ட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்களை தொடர்ந்து அந்நாட்டில் வசிக்கும் ஆப்ரிக்கர்களின் வாக்குகளை பெற டிரம்ப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப், வடக்கு கரோலினா மாகாணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அமெரிக்க வாழ் ஆப்ரிக்கர்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். கறுப்பினத்தவர்களுக்கு பாதுகாப்பான சமூகம், சிறந்த கல்வி, அதிகபட்ச ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு என்ற 3 வாக்குறுதிகளை உள்ளடக்கிய புதிய உத்திரவாதம் ஒன்றையும் அவர் முன்மொழிந்தார். இதனிடையே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் தீவிர பிரச்சாரத்திறகு இடையே தனது 69-வது பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது பேசிய அவர் தேர்தல் களத்தில் இன்னும் 2 வாரங்களுக்கு ஓய்வே கிடையாது. எனது பிரர்சாரமும் ஓயாது என்றார். தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்தை முடித்தாக வேண்டும். ஆனால் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தை விட தனது வர்த்தகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை அறிந்து அதிர்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.