தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுவும் தாக்கலும் செய்தனர்.
இவர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்கான பரிந்துரைக் கடிதம், கட்சியின் பொதுச்செயலாளர் கையொப்பமிட்டு வழங்கப்படுவது வழக்கம்.
இப்போது மூன்று தொகுதி வேட்பாளர்களுக்காக வழங்கப்பட்ட கடிதத்தில் ஜெயலலிதா கையொப்பம் இடவில்லை. அதற்குப்பதிலாக இடது கை பெருவிரல் ரேகை, கைநாட்டாக வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை டாக்டர்கள், இதற்கு சாட்சி கையெழுத்திட்டுள்ளனர்.
அத்துடன் வழங்கப்பட்ட கடிதத்தில், கையெழுத்திடும் நிலையில் ஜெயலலிதா இல்லை. அதனால் அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விஷ்யம் இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..