சாதாராண கொலை போல முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
இது தான் இன்னமும் ஒரு சட்டத்துறை நபர் என்கிற எண்ணப்பாங்க்கில் இருந்து வந்திருக்கிற அறிக்கை போல தெரிகிறது.
சட்டம் வேறு அரசியல் வேறு என்பதையும் முதல்வர் மேலும் கருத்தில கொள்ளவேனூம்.
பதவிய்ரெற்ற ஆரம்பத்தில் இருந்த நிலைப்பாட்டில் இருந்து தனது அனுபவத்தின் மூலம் தனது நிலைப்பாட்டை முதலமைச்சர் புடம் போட்டது போல இதிலும் ஒரு தீர்க்கமான மாற்ற்த்தை செய்வார் எனும் நம்பிக்கை இருக்கிறது.
அவர் வெளிநாட்டில் இருப்பதால் முழுவிபரமும் தெரிந்திருக்காவிடின் அறிக்கை வெளியிடமுன்னம் கேட்டு அறிந்திருக்க வேணும்.
தாயகம் போன பின்னராவது சரியான முறையில் அறிக்கை விடவேணும்.விடுவார் என்கிற நம்பிக்கை இருக்கு.
இதில ஆகப்பகிடி என்னவெண்டால் , இந்த அறிக்கையை பார்த்துட்டு மென்வலுக்குஞ்சொன்று கூட , ” இது ஒரு மென்வலு அறிக்கை ” என்று மிஸ்ரர் மென்வலுவின் உண்மை நிலைப்பாட்டை தம்மை அறியாமல் போட்டுடைத்திருப்பதுதான்.