இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 8 கிலோ ஹெராயின் பறிமுதல்

315

 
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பிரோஸ்பர் பிரிவு அருகே எல்லை பாதுகாப்பு படையினருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த கடத்தல்காரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ரூபாய் 40 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

201610300004224163_indiapakistan-border8-kg-of-heroin-seized_secvpf

எல்லை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்கள். பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டைக்கு பின்னர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது அங்கு 133 ஹெராயின் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பபு ரூபாய் 40 கோடி ஆகும்.

இந்த ஆண்டில்  எல்லை பாதுகாப்பு படை இதுவரை 214 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்துள்ளது.

SHARE