அடர்த்தியான புருவம் வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்!

210

ஒருசில பெண்களுக்கு புருவம் இருந்தும் அடர்த்தியாக இல்லாமல் இருக்கும், இதனால் அவர்கள் மைகளை கொண்டு தங்களின் புருவங்களில் வரைந்துக் கொள்கிறார்கள்.

நமது வீட்டில் உள்ள விளக்கெண்ணெய், ஆலிவ் ஆயில், வெங்காயச்சாறு மற்றும் ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றில் முடிவளர்ச்சியைத் தூண்டக்கூடிய விட்டமின்கள் அதிக அளவில் இருக்கிறது.

எனவே இந்த பொருட்களைக் கொண்டு இயற்கையான முறையில் புருவங்களை அடர்த்தியாக வைத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • விளக்கெண்ணெய் – 10 மிலி
  • ஆலிவ் ஆயில் – 10 மிலி
  • வெங்காய சாறு – 20 மிலி
  • ஆரஞ்சு ஜூஸ் – 20 மிலி
செய்முறை

விளக்கெண்ணெய், ஆலிவ் ஆயில், வெங்காயச் சாறு, ஆரஞ்சு ஜூஸ் ஆகிய அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் சமஅளவு எடுத்துக் கொணடு ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அந்த கலவையை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைக்க வேண்டும்.

பின் இந்த கலவையை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் புருவங்களின் மீது தடவி வர வேண்டும்.

இதே போல் ஒரு மாதம் செய்து வந்தால், உங்களின் புருவம் அடர்த்தியாக வளருவதைக் காணலாம்.

SHARE