ஆன்லைன், ஆப்ஸ் மூலம் பல்கிப் பெருகி வரும் பாலியல் தொழில்… அதிர வைக்கும் ஆய்வு[IST] மும்பை: விரல் நுனியில் தகவல்களை தரும் ஆப்ஸ், சமூக வலைத்தளங்களின் மூலம் தற்போது பாலியல் பாலியல் தொழில் செய்வது அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாலியல் தொழில் செய்து சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக முதன் முதலாக பாலியல் தொழிலுக்கு சமூக வலைதளங்கள், ஆப்ஸ்கள் பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலில் ஈடுபடுவோர் தங்களது விளம்பரங்களை இணையதளத்தின் உள் பக்கங்களில் மறைத்து வெளியிடுவதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பாலியல்தொழில் அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் தொழிலுக்கு ஆப்ஸ்களை பயன்படுத்துகின்றனர். பாலியல் தொழில் நடக்கும் விவரங்களை தெரிந்து கொள்ள, குறிப்பிட்ட ஆப்களுக்கு சென்று, வாடிக்கையாளர் இருக்கும் முகவரியை டைப் செய்தால், பாலியல் தொழில் நடக்கும் இடத்தின் முகவரி கிடைக்கும் வகையில் ஆப்ஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாலியல் முகவர்கள் பாலியல் தொழிலில் முகவர்களாக செயல்படுபவர்கள் விளம்பரங்கள் கொடுக்க அதிகளவில் இணையதளங்களை பயன்படுத்துவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் இவர்களுக்கு உதவுகிறது என்ற கருத்தும் எழுந்துள்ளது. லட்சக்கணக்கில் வருமானம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் பாலியல் முகவர்கள் ஆண்டுக்கு 75,000 டாலர்கள் முதல் 1,00,000 டாலர்கள் வரை சம்பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. 80 சதவீத பாலியல் தொழில் இணையதளம், சமூக வலைதளங்கள், ஆப்ஸ் வாயிலாக நடக்கிறது.
இன்டர்வியூ இத்துடன் இந்தத் தொழில் நின்று விடுவதில்லை. இந்தத் தொழிலுக்கு வருபவர்களுக்கு நேர்முகத் தேர்வு வைக்கின்றனர். அந்தத் தேர்வுக்கு வருகிறவர்களுக்கு 60 டாலர் கொடுக்கின்றனர் போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடற்ற பெண்கள் இது ஒருபுறம் இருக்க இங்கிலாந்தில் வீடற்று தெருக்களில் வசிக்கும் பெண்களை குறிவைத்து இணையதளங்களில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. வீடுகள் விற்பனை, வேலைவாய்ப்பு, வீட்டுப்பொருட்கள் போன்றவை தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கு சில இணையதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெண்களை குறிவைக்கும் இணையதளங்கள் இந்த இணையதளங்களில் சுமார் 288 இணையதளங்கள் பாலியல் உறவுக்காக வீடற்ற பெண்களை குறிவைத்து விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன என இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனம் தெரிவித்தள்ளது. வாடகை தேவையில்லை தங்குவதற்கு இடம் உண்டு, கட்டணம் செலுத்த தேவையில்லை என்பதே இவர்களின் ஸ்லோகன் ஆகும். தங்குவதற்கு இடம் வேண்டுமென்றால், உங்களுடைய பெயர், தற்போது எடுக்கப்பட்ட உங்களுடைய புகைப்படம் போன்றவற்றை உங்களுடைய தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்த அனுப்புங்கள் என கூறுகின்றனர். அழகான இளம்பெண்கள் அழகான பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் என்று வெளியாகும் விளம்பரங்களை பார்த்து இங்கிலாந்தில் தெருக்களில் வசிக்கும் வீடற்ற பெண்கள் விண்ணப்பிக்கின்றனர். அதற்கு கைமாறாக இப்பெண்கள் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்பதே இந்த விளம்பரத்தின் பின்னணியாகும். எச்சரிக்கும் அமைப்பு வீடுகள் இல்லாமல் சிரமப்பட்டு திரியும் பெண்கள், இதற்கு ஒப்புக்கொள்கின்றனர். ஏனெனில், தங்கள் வாழ்க்கையின் பல்வேறு நாட்களை தெருக்களில் கழிக்கும் இவர்களுக்கு, இதுபோன்ற பாலியல் உறவு பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது எனவே வீடற்ற பெண்கள் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் எனவும் தொண்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.