திமிங்கிலங்களை பார்வையிடச் சென்ற நபர் திடீரென உயிரிழப்பு!

235

100

வெலிகம-மிரிஸ்ஸ கடற்கரைக்கு திமிங்கிலங்களை பார்வையிடச் சென்ற நபர் திடீரென உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுவீடன் நாட்டை சேர்ந்த 74 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரிஸ்ஸ கடற்கரையில் உள்ள திமிங்கிலங்களை பார்வையிடச் படகு மூலம் சென்ற போதே இவர் உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் சுகயீன முற்ற நிலையிலேயே கடற்கரைக்கு பயணித்துள்ளார் என்றும்,மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்தே உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE