நேரம் பாராது மக்கள் சேவை – மகிழ்ச்சி தெரிவித்தனர் முல்லை மக்கள்

244
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கான தற்காலிக வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு 31-10-2016 திங்கள் இரவு 8.00 மணியளவில் முல்லைத்தீவு வலைய கல்விப்பணிமனை மாநாட்டு மண்டபத்தில் வடக்கு போக்குவரத்து அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அ.நீக்கிலாஸ்பிள்ளை, போலிஸ் உத்தியோகத்தர்கள், வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் ஒன்றியத்தின் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள், பேரூந்து உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேற்படி நிகழ்வானது ஏலவே மாலை 2.30 க்கு நடாத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும் கிளிநொச்சி மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கான தற்காலிக வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு காலை 10.30 மணியில் இருந்து பிற்பகல் 6.30 மணிவரை நீடித்துச் சென்றதனால் காலதாமதமாக இரவு 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
குறிப்பாக நேற்றயதினம் 71 பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிர்வரும் மார்கழி மாத இறுதிவரை அனுமதிப்பத்திரம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது, இதன்போது அங்கு வந்திருந்த உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள், அமைச்சரதும் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் மற்றும் உத்தியோகத்தர்கள் தமது நேரம் உணவு என்பவைகளையும் பொருட்படுத்தாது காலையில் இருந்து மறுநாள் அதிகாலை 2.30 மணிவரை சேவை வழங்கியதையிட்டும், தமது தற்காலிக அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணம் ரூபாய் 3000 இல் இருந்து சரி பாதியாக குறைக்கப்பட்டமையையிட்டும் தமது பெருமகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகளைத் தெரிவித்திருந்தனர்.
அதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் வட மாகாணத்தின் போக்குவரத்து சேவையினை ஏனைய மாகாணங்கள் திரும்பிப்பார்க்கும் அளவிற்கு தரமானதும், பாதுகாப்பானதும், செளகரியமானதுமான சேவையை மக்களுக்கு வழங்குவதே தனது பிரதான இலக்கு என்றும், அதனை அடைவதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு போக்குவரத்துத் துறையில் சீர்கேடுகளை சீர் செய்வதற்கு மிக விரைவில் அதிரடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றது என்பதை சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் மனதில்வைத்து செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
unnamed
unnamed-1
SHARE