மம்மிக்கள் என்பது உயிரற்ற உடலங்களை நீண்ட காலம் பேணிப் பாதுகாப்பதற்கு பயன்படுத்தப்படும் முறையாகும்.
இம் முறைாயனது அதிகளவில் எகிப்து நாட்டில் நடைமுறையில் உள்ளது.
இவ்வாறு சிலி நாட்டிலும் மம்மிக்கள் காணப்படுகின்றன.
சிலி நாட்டில் காணப்படும் மம்மிக்களில் இதுவரை இல்லாததும், எதிர்பாராததுமான மாற்றம் ஒன்று ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது அவற்றின் உடல் கருப்பு நிறமான குழம்பாக மாறுகின்றமை அவதனிக்கப்பட்டுள்ளது.
இதனை எவ்வாறு தடுப்பது என்று தெரியாது அவர்கள் தற்போது குழம்பிப்போய் உள்ளனர்.
இதுவரையில் சுமார் 100 இற்கும் மேற்பட்ட மம்மிக்கள் இவ்வாறு உருமாறி வருவதாகவும், அவை ஒவ்வொன்றும் சுமார் 7,000 வருடங்களுக்கு முற்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இம் மம்மிக்கள் காணப்படும் வடக்கு சிலி பகுதியை ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார முகவர் அமைப்பும், யுனெஸ்கோவும் உலகின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.