அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் மிட்செல் ஒபாமாவுக்கு அமைச்சர் பதவி வழங்க தயாராக இருப்பதாக ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், உலகம் முழுவதும் கல்வி உள்ளிட்ட பெண்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க போவதாக மிட்செல் தெளிவாக கூறியுள்ளார்.
இது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளோம். மீண்டும் அவர் அரசில் இடம் பெற எப்போது விரும்பினாலும், அதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். இருவரும் இணைந்து சிறப்பாக பணிபுரிவோம்.
ஆனால், தற்போது அவர் சற்று இடைவெளி எடுக்க விரும்புகிறார் என எண்ணுகிறேன். அவர் விரும்பும்போது, முதல் ஆளாக வாய்ப்பு வழங்குவேன். அமெரிக்காவின் முதல் பெண்மணியாக அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
அந்த பணி எவ்வளவு கடினமானது என எனக்கு தெரியும் என்று ஹிலாரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில், ஹிலாரிக்கு ஆதரவாக மிட்செல் ஒபாமா பல இடங்களில் பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.