திருகோணமலை – குமாரபுரம் பகுதியில் 24 தமிழர்களை கொலை செய்த சம்வம் தொடர்பில் சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகள் 6 பேரை விடுதலை செய்வதற்கு அனுராதபுரம் உயர்நீதிமன்றத்தின் ஜூரி சபை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்டமா அதிபர் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு இவ்வாறு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதனடிப்படையில், இம்மாதம் 22ஆம் திகதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 1996ஆம் ஆண்டு பொதுமக்கள் 24 பேரை கொலை செய்ததாக குறித்த 6 இராணுவ அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் 25 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு காயப்படுத்தியதாகவும் குறித்த இராணுவ அதிகாரிகள் 6 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் உயர்நீதிமன்றத்தின் ஜூரி சபை இவர்களை விடுதலை செய்ய தீர்மானித்தது.
எனினும், ஜூரி சபை மேற்கொண்ட இந்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.