மட்டக்களப்பு சிகண்டி அறக்கட்டளை அமைப்பு முன்னெடுத்த வறிய மாணவர்களுக்கான சமூகப்பணி

233

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி மற்றும் அண்டிய பிரதேசத்தின் வளர்ச்சிக்காக நீண்ட காலமாக சேவையினை நடைமுறைப்படுத்தி வருகின்ற சிகண்டி அறக்கட்டளை அமைப்பினால் நேற்று(01) வறிய மாணவர்களுக்கு ஒரு தொகுதி பாதனிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட விநாயகர் கிராமம், அலைமகள் பாடசாலையில் கல்வி பயிலும் தாய் தந்தையை இழந்த மாணவர்கள், குடும்ப வறுமை காரணமாக பாதனி வாங்க முடியாத மாணவர்களை இனம் கண்டு சுமார் 18 மாணவர்களுக்கான பெறுமதியான பாதனிகளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி குறித்த உதவியினைச் செய்துள்ளனர்.

குறித்த பாடசாலையானது மிகவும் கஸ்டப்பட்ட குடும்பத்தின் மாணவர்களைக் கொண்ட பாடசாலையாக உள்ளது.

சிகண்டி நாம் உதவும் கரங்கள் அமைப்பின் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பணியாளர்களின் உதவியின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் இருந்து பல கிராமங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் சார்ந்த உதவிகளாக செய்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் எதிர்காலத்தில் கிராமங்கள் தோறும் பல்வேறுபட்ட உதவிகளை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக சிகண்டி அறக்கட்டளை அமைப்பின் தலைவர் எஸ்.முரளிதரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பாடசாலையின் அதிபர் எஸ்.சுந்தரலிங்கம் தலைமையில் மாணவர்களுக்கு பாதனிகளை வழங்கி வைக்கும் நிகழ்வுக்கு கல்குடா கல்வி வலய ஏறாவூர்பற்று-2 கோட்டத்துக்குரிய கோட்டக் கல்விப் பணிப்பாளர் பி.சிவகுரு, சிகண்டி அறக்கட்டளை அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்ததுடன் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாதனிகைளையும் வழங்கி வைத்தனர்.

குறித்த நிகழ்வில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் பி.சிவகுரு, எமது தமிழ் பிரதேசத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பல்வேறுபட்ட கஸ்டத்தின் மத்தியில் கல்வியினைத் தொடர்கின்றனர்.

அவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்து சிகண்டி அறக்கட்டளையின் மத்திய கிழக்கு கிளை பணியாளர்கள் பல்வேறுபட்ட உதவிகளைச் செய்து வருகின்றார்கள், எதிர்காலத்திலும் அவர்கள் பல பணிகளைச் செய்வதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-11 625-0-560-320-160-600-053-800-668-160-90-12 625-0-560-320-160-600-053-800-668-160-90-13 625-0-560-320-160-600-053-800-668-160-90-14 625-0-560-320-160-600-053-800-668-160-90-15 625-0-560-320-160-600-053-800-668-160-90-16 625-0-560-320-160-600-053-800-668-160-90-17

 

 

 

SHARE