அழிந்து செல்லும் கலைகளை வெளிக் கொணர்வதன் மூலமே எமது அடையாளத்தை பேண முடியம் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற கலை இலக்கிய பண்பாட்டு பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
எங்களுடைய கலை கலாசார பண்பாட்டு விடயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது குறைந்து கொண்டு செல்கின்றது.
கலை கலாசார பண்பாட்டு பழக்க வழக்கங்களை மீண்டும் உயிர் கொடுத்து மீண்டும் நிலைபெறச் செய்வதற்கு எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது.
ஒரு பிரதேசமாக இருக்கட்டும், மாகாணமாகட்டும், ஒரு நாடாக இருக்கட்டும் அல்லது ஒரு இனமாக இருக்கட்டும் அதனுடைய தனித்துவத்தையும் தன்னுடைய அடையாளத்தையும் பேணி அந்த இனத்தை பாதுகாத்து நிற்பது அந்த இனம் அல்லது மொழி சார்ந்த கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்கள் தான் எனவும் கூறியுள்ளார்.
இவையே அந்த இனத்தின் அடையாளமாக அவர்களை நிலைநிறுத்துகின்றது.
இந்த வகையிலே தமிழ் பேசுகின்ற மக்களாகிய நாங்கள் இந்த மாவட்டத்தில் உள்ள சிங்களம் பேசுகின்ற சகோதரர்கள் எல்லோருக்கும் எங்களுடைய கலை, கலாசார, பண்பாடுகளை பேணி பாதுகாப்பதற்கும், ஒரு சமூகத்தில் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்துவதற்கும் இவ்வாறான நிகழ்வுகள் உதவுகின்றன.
இனிவரும் காலங்களில் இவ்வாறான நிழகழ்வுகளை ஒழுங்குபடுத்துகின்ற போது எங்களிடம் இருந்து அருகிச் செல்கின்ற, காணாமல் போகின்ற நாட்டியம், கூத்து மற்றும் இந்தப் பிரதேசத்திற்கே உரித்தான சில கலைகள் அழிந்து செல்கின்றது.
அவற்றையும் நாம் இவ்வாறான நிகழ்வுகளில் வெளிக் கொணரரும் போது எமது கலை கலாசார அடையாளங்களை இளைய சமூகம் அறிக கூடிய வாய்ப்பினை ஏற்பதுடன் அதனை பாதுகாக்க கூடியதாகவும் இருக்கும் எனவும் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கூறியுள்ளார்.