சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி இன்று(03) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் முதற்கட்டமாக, தெரிவு செய்யப்பட்ட 20 இளைஞர் மற்றும் யுவதிகளுக்கே சுற்றுலாத்துறையினை ஊக்குவிக்கும் வகையில் குறித்த ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி நெறி மன்னார் ஆஹாஸ் விடுதியில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எஸ்தர் மைக்கின் டோச் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன் போது மன்னார் மாவட்டச் செயலக அதிகாரி, வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள், சுற்றுலாத்துறை சார்ந்த பிரதி நிதிகள் என பலர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.