கிளிநொச்சி ஏ9 வீதியில் போக்குவரத்து பல மணிநேரம் போக்குவரத்து தாமதமடைந்துள்ளது.

224

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் நூறு வருடம் பழமை வாய்ந்த மரம் ஒன்று நேற்றிரவு முழுமையாக சரிந்து விழுந்ததில் ஏ9 வீதில் பல மணிநேரம் போக்குவரத்து தாமதமடைந்துள்ளது.

கிளிநொச்சி ஏ9 வீதி கந்தசுவாமி கோவில் அருகிலுள்ள இத்தி மரம் மழை காரணமாகவே சரிந்து விழுந்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவதினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து செயற்பட்டு நேற்றிரவு போக்குவரத்தை விரைவுபடுத்த முயற்சி செய்துள்ளனர்.

இருப்பினும் குறித்த மரம் முற்றாக இன்னமும் அகற்றப்படாமல் உள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-3

 

 

 

 

SHARE