வவுனியாவில் தீபாவளி தினத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு, மோதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேருரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

231

valvedua-680x365

வவுனியாவில் தீபாவளி தினத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு, மோதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேருரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த தீபாவளி தினத்தில் வவுனியாவின் பல இடங்களிலும் வாள்வெட்டு, குழுமோதல்கள் இடம்பெற்று பலர் காயமடைந்திருந்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் மதீனாநகர் பகுதியில் தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் 5 பேரையும், கற்குழி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தொடர்பில் 2 பேரையும் கைது செய்து வவுனியா நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

இதனை விசாரித்த வவுனியா நீதிமன்றம் 7 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE