அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் புகைப்படங்கள் முதன் முறையாக பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியை தெரிவும் செய்யும் தேர்தல் பிரசாரங்கள் களைகட்டி வரும் நிலையில் தற்போதைய ஜனாதிபதி ஒபாமா இன்னும் சில தினங்களில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தின் புகைப்படங்களை கடந்த 8 ஆண்டுகளில் முதன் முறையாக தனியார் நிறுவனம் ஒன்று படம் எடுத்து வெளியிட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ளது ஜனாதிபதி ஒபாமா குடும்பத்தினரின் பிரத்யேக அறைகள். குறித்த அறைகளை பிரபல வடுவமைப்பாளர் மைக்கேல் ஸ்மித், ஒபாமா குடும்பத்தினரின் ரசனைக்கு ஏற்ப வடிவமைத்து வழங்கியுள்ளார். மட்டுமின்றி பாரம்பரியம் காக்கும் வகையில் தற்கால வேலைப்பாடுகளுடன் இந்த வடிவமைப்பு நிகழ்ந்துள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க வெள்ளை மாளிகையின் மதிப்புக்கு எந்த வகையிலும் களங்கம் ஏற்படுத்தாத வகையில் தங்களது இல்லத்தை வடிவமைத்துள்ளதாக குறித்த புகைப்படங்களை வெளியிட்ட தனியார் ஊடக நிறுவனத்தின் கேள்வி ஒன்றிற்கு மிட்செல் ஒபாமா பதிலளித்திருந்தார்.
அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி உணவு அருந்தும் அறையின் புகைப்படங்களை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தனர். அறையில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் மற்றும் வேலைப்பாடுகள் அனைத்தும் வெள்ளை மாளிகையின் சேகரிப்பில் இருந்தே பயன்படுத்தியுள்ளதாக மிட்செல் தெரிவித்துள்ளார்.