“திருவள்ளுவர் சிலை திறந்து வைப்பு” 

207
இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள வி.ஜி.பி.உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வீ.சீ.சந்தோசம் அவர்களினால் அன்பளிப்பாக வழங்கிய  திருவள்ளுவர் சிலை ஒன்று இரத்தினபுரி மாவட்டம் எம்பிலிபிட்டிய கல்வி வலையத்திற்கு உட்பட்ட  இறக்குவானை பரியோவான் தமிழ் கல்லூரியில் அதிபர் பூபாலபிள்ளை கமலேஸ்வரன் தலைமையில் பிரதிஷ்டை செய்ததை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் பிரதம அதிதியாக  கலந்துக் கொண்டு சிலையை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இந் நிகழ்வில் சமூக சேவகர் மறவன் புலவர் சச்சிதானந்தன்இ மாகாண சபை உறுப்பினர் அஜித்குமார மெத்தேகமஇ உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கே.ஆர்.கிருஷான்இ மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் ரூபன் பெருமாள் உட்பட கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள்¸ பெற்றோர்கள் உட்பட மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள். இதன் போது இலவச வைத்திய முகாம் ஒன்றும் ஆரம்ப பிரிவில் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கள்¸ இந்த மாணவர்கள் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்வதற்கு காரணமாக இருந்த ஆசிரியர் க.சசிதரன்  கௌரவிப்பும்¸ பாடசாலைக்கான ஒரு தொகுதி புத்தகங்கள் அமைச்சரினால் வழங்கள் போன்றன இடம் பெற்றன.
unnamed
unnamed-3
unnamed-4
unnamed-5
unnamed-2
SHARE