இனிமேல் தண்ணி குடிக்காதீங்க! நாம் தினமும் செய்யும் தவறு இதுதான்

244

drink-water

நீர் இன்றி அமையாது உலகு என்பது போல நீரை குடிக்காமல் எந்தவொரு மனிதனாலும் உயிர் வாழ முடியாது.

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் அளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்!

தண்ணீரை நின்று கொண்டு குடிக்க கூடாது, அப்படி தொடர்ச்சியாக குடித்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

தண்ணீரை நின்று கொண்டு குடித்தால் அது வயிற்று உட்பகுதிக்குள் சென்று தெளித்து சிதறுகிறது.

இப்படி நாம் தொடர்ந்து செய்து வந்தால் அது நம் வயிற்றையும், இரைப்பையையும் கடுமையாக பாதிக்கும்.

நின்று கொண்டு தண்ணீர் பருகுவதால் உடல் திரவங்கள் பாதிக்கப்பட்டு நமது கால் மூட்டு பகுதியை பாதித்து வலியை ஏற்படுத்தும்.

நரம்பு பதற்ற பிரச்சனை, வயிறு செரிமான பிரச்சனை போன்றவைகளும் தண்ணீரை நின்று கொண்டு குடித்தால் வர அதிக வாய்ப்பிருக்கிறது.

உட்கார்ந்து நீர் குடிக்காமல் நின்று கொண்டே குடிப்பதால் Gastroesophageal Reflux Disease என்னும் நோய் வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது பின்னால் நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற நோயையும் ஏற்படுத்தும் வல்லமை பெற்றதாகும்.

நாம் தண்ணீரை உட்கார்ந்து பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் உடலில் உள்ள ஆசிடிட்டி அளவு நீர்த்து போகும் மற்றும் உடலுக்குள் சரியான கலவையில் நீரானது சென்று உடலை புத்துணர்ச்சியோடு வைக்கும் என்பதே ஆயுவேத மற்றும் பொது ஆங்கில மருத்துவர்களின் ஒத்த கருத்தாக உள்ளது.

SHARE