மஹிந்த எதிர் கட்சி தலைவராக இருந்த காலத்தில், அவரது தமிழ் ஊடக அதிகாரியாக கடமையாற்றியவர் யார் தெரியுமா? அந்த நபர் தற்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அப்படியானால் அவர் ஒரு ஐமசுமு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும் என்றல்லவா ஊகிக்கிறீர்கள்? ஆனால் அவர் ஐதேக ஊடாக பாராளுமன்றம் புகுத்தப்பட்டவர்!!
குழப்பமாக இருக்கிறதா? கீழே படியுங்கள்
மஹிந்த எதிர் கட்சி தலைவராக இருந்த காலத்தில், அவரது தமிழ் ஊடக அதிகாரியாக கடமையாற்றியவர் ஜயரத்னம் சிறீரங்கா! அதாவது இன்றைய மின்னல் ரங்கா. அந்த தொடர்புதான் மஹிந்த வீட்டு அடுக்களை வரை அவரை கொண்டு சென்றது. இந்த தொடர்பு காரணமாக பின்னர் ரங்காவுக்கு ஒஸ்லோவில் அமைந்த தூதரகத்தில் ஜனாதிபதி தொழில் ஒன்றைக்கூட வழங்கினார். இதோ அமெரிக்க தூதரகத்தின் கேபிளின் பகுதி (விக்கிலீக்ஸில் இருந்து)
Popular Tamil TV talk show host Sri Ranga Jeyaratnam (strictly protect), who has close personal ties to the Rajapaksa family…..
The President, whose son is a close friend of Ranga’s, insisted that Ranga leave the country, offering him the post of DCM in Oslo as an inducement. Should he fail to accept the offer of exile, Rajapaksa reportedly told him, Devananda would have him killed. Ranga said he also feared assassination by the LTTE, who consider him a Rajapaksa stooge.
பார்க்க https://www.wikileaks.org/plusd/cables/07COLOMBO728_a.html
புலிகள் காலத்தில் தனது அரசியல் பயணத்தை வன்னியில் தொடங்க ஆசைப்பட்ட ரங்காவுக்கு எதிரும் புதிருமான புலிகளும் EPDP யும் எதிர்ப்பு தெரிவித்தன என்பதும் இன்னுமொரு ஆச்சரியம்! அவ்வளவு தூரம் இவரைப்பற்றிய இமேஜ், டெமேஜ்! இதன் காரணமாக மஹாராஜா ஊடகமூடாக ஐதேக தலைவர் ரணிலை நெருங்கி மலையக மக்களின் ஓட்டுக்கள் மூலம் எம்பியானார்.
(இதற்கும் மேலதிகமாக தேர்தல் முடிவுக்கு பின்னர், மஹாராஜா நிறுவனம் தேசியப்பட்டியல் எம் பி ஒன்றும் கேட்டது! ரணில் மறுக்க மஹாராஜா நிறுவனம் ரணிலுக்கு எதிராக செயற்பட துவங்கியது. சஜித்தை கொம்பு சீவி விட்டு ரணிலை பழி வாங்கியது. இதன் காரணமாக ரணிலுக்கும் சிரசைக்கும் இன்னும் சரியான உறவில்லை)
புலிகளின் அழிவுக்கு பின்னர் வன்னிக்கு தன் அரசியல் தளத்தை மாற்றுவது ரங்காவின் திட்டம். ஆனால் வெற்றிலை சின்னத்தில் அவர் போட்டியிடுவதை ரிஷாத் கடுமையாக எதிர்க்க தனது பிரஜைகள் முன்னணி மூலம் அரசியல் செய்து பஸ் சின்னத்தில் நூற்றுக்கும் குறைவான வாக்குகளை எடுத்து மூக்குடைபட்டார். தனது வன்னி அரசியல் கனவை ரிஷாத் உடைத்ததும் ரிஷாத் மீதான கோபத்துக்கு காரணம்.