அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் உலக அளவில் நிகழ சாத்தியமுள்ள 5 மாற்றங்கள்

287

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பெற்ற வெற்றியால், அமெரிக்காவுக்கும், உலகின் மற்ற நாடுகளுக்கும் உள்ள உறவுகளில் சில முக்கியமான வழிகளில் சில மாற்றங்கள் நிகழலாம். அவ்வாறான ஐந்து விஷயங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
டொனால்ட் டிரம்ப்

dcp79764649746464

தங்குதடையற்ற வணிகம்

தான் வலியுறுத்தி வந்த வணிக கொள்கைகளை புதிய அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் பின்பற்றத் தொடங்கினால், அது பல தசாப்தங்களாக உலகின் மற்ற நாடுகளுடன் அமெரிக்கா செய்யும் வணிக முறையில் பெரும் மாற்றத்தினை கொண்டு வருவதாக அமையும்.

அமெரிக்க மக்களின் பணி இழப்புக்கு காரணமாக அமைகிறது என்று டிரம்ப்பால் குற்றம்சாட்டப்பட்ட தற்போது நடைமுறையில் உள்ள அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய வட அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான தங்குதடையற்ற வணிக ஒப்பந்தம் உள்ளிட்ட பல தங்குதடையற்ற வணிக ஒப்பந்தங்களை நீக்கி விடப் போவதாக அவர் முன்னர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பருவநிலை மாற்றம்

கடந்த டிசம்பர் 2015-இல் உலகின் 195 நாடுகளுக்கும் மேலாக கையெழுத்திட்டுள்ள பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை தான் ரத்து செய்யப் போவதாக முன்பு டிரம்ப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக வெப்பமயமாதல் திட்டங்களுக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதி உதவியை தான் நிறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை எந்த தனி நாடும் புறந்தள்ள முடியாது என்றாலும், ஒரு வேளை அமெரிக்கா இந்த ஒப்பந்த திட்டத்தில் இருந்து விலகினாலோ அல்லது தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிறுவிய உள்நாட்டு நடவடிக்கைகளை டிரம்ப் கைவிட முடிவெடுத்தாலோ அது இந்த திட்டத்துக்கு பெரும் பின்னடைவை தரும்.

மூடப்பட்ட எல்லைகள்

குடியேற்றம் குறித்து கடுமையாக பேசி வந்த டொனால்ட் டிரம்ப் தனது நிலையை சற்று மாற்றி கொண்டதால் அவர் தனது புதிய நிலையில் தொடர்வாரா அல்லது தனது முந்தைய துணிச்சலான கூற்றுக்களை பின்பற்றப் போகிறாரா என்பது கணிக்க முடியாத ஒன்றாகும்.

தனது தேர்தல் பிரச்சாரத்தின் துவக்கத்தில், மெக்சிகோ மற்றும் அமெரிக்க எல்லைக்கு இடையே ஒரு சுவரை எழுப்பப் போவதாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் உள்ள 11 மில்லியன் மெக்சிகோ குடியேறிகளை நாடு கடத்தப் போவதாகவும் கூறியிருந்தார்.

பின்னர்,தனது நிலையை சற்று மாற்றிக் கொண்டு மென்மையான போக்கை கடைப்பிடித்தார்.

அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் நுழைவதை முற்றிலுமாக தடை செய்யப் போவதாக தெரிவித்த டிரம்ப், பின்னர் இது தனது ஆலோசனை தான் என்றும் கொள்கை அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

நேட்டோ

வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பினை (நேட்டோ) வழக்கொழிந்த அமைப்பாக விவரித்துள்ள டொனால்ட் டிரம்ப், இதன் உறுப்பினர்கள் அமெரிக்காவின் தாராள குணத்தால் பெரும் பயனடைந்த நன்றி உணர்வற்ற கூட்டணி நாடுகள் என்றும் தெரிவித்துள்ளார்.

போதுமான இழப்பீடு எதுவும் இல்லாமல், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள நாடுகளை இனியும் பாதுகாக்கும் பொறுப்பை அமெரிக்கா ஏற்காது என்று கூறியுள்ள டிரம்ப், தங்களுக்கு தேவையான இழப்பீடு வழங்கப்படவில்லையென்றால் நேட்டோ அமைப்பில் இருந்து அமெரிக்க படைகளை விலக்கிக் கொள்ளக் கூடும் என்று எச்சரித்துள்ளார்.

தற்போது நேட்டோ அமைப்பு குறித்து டிரம்ப் என்ன முடிவெடுப்பார் என்பது தெரியவில்லை

ரஷ்யா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடான உறவுகளில் உள்ள பதற்றத்தை தன்னால் தளர்த்த முடியும் என்று நம்புவதாக தெரிவித்த டொனால்ட் டிரம்ப், புடின் ஒரு சிறந்த தலைவர் என்றும், அவருடன் தான் ஒரு நல்ல உறவினை வளர்க்க விருப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஆனால், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ரஷ்யாவுடன் கூட்டாக போரிடுவதைத் தாண்டி இந்தக் கூட்டுறவு குறித்து, மிக குறைவான கருத்துக்களை டிரம்ப்

SHARE