தமிழர்கள் அனைவரும் புலிகளே இனவாதத்தை கக்கும் மட்டக்களப்பு விகாராதிபதி விகாராதிபதி சிங்கத்துக்கு பிறந்த வரலாறு தெரியாத புத்த பிக்கு
தொகுப்பு,மார்க்கண்டு தேவராஜா(LLB)Mayuraagoldsmith,Switzerland, குமரிக்கண்ட கடல் கோள் உருவாகுவதற்கு முன்னரே கடல் கொண்ட அதாவது கடலால் அழிவுற்ற நாடுகளும் ஒன்றாக இருந்த இலங்கையில் வாழ்ந்த மக்களாக ,நாகர்கள் ,இயக்கர்அதாவதுயக்க்ஷர்கள்,வேடர்கள் ,இடையர்கள் ,அமானுயர்கள் ,என்ற இனங்களை சேர்ந்தவர்கள் ,வாழ்ந்த தற்கான ஆதாரங்களை அகழ்வாராய்சிகளும் ,அவற்றில் கிடைத்த ஆதார சான்றுகளும், பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் கூறி உள்ள கருத்துக்களும், மெய்பித்தே நிற்கின்றது .இதை உண்மை படுத்த இந்த இனத்தவர்கள் அவர்கள் அறிவுக்கு எட்டியவகையில் எழுதிவைத்த குறிப்புக்கள் ,திட்டம் இட்டு பின் வந்த அரசர்களாலும் அரசியல் ஆளர்களாலும் அந்நிய படை எடுப்பாளர்களாலும் அழிக்கப்பட்டும் சூறை ஆடப்பட்டும் விட்டது எமது துர்அதிஸ்டமே.,,,எஞ்சிய முற்காலத்து தென்னிந்திய மற்றும் ஈழத்தமிழர்களினது குறிப்புக்களும் வரலாற்று நூல்களும் ஜெயவர்த்தனா அரசால் திட்டம் இட்டு யாழ் நூலகம் எரிக்க பட்டபோது அழிந்து விட்டது ,,,
தென்னிந்தியாவில் ஆரம்ப மக்கள் வாழ்ந்த தாக அறியபடுகின்ர அதே காலத்திலேயே ,ஈழத்திலும் மக்கள் வாழ்த்து இருக்கலாம் ஈழத்தின் தெனிந்தியாவுக்கு அண்மித்த அமைவிடத்தை பொறுத்தவரையில் அது சாத்தியமான ஒன்றாகும் ,நாகர்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்தவர் என்பதை துவாரக யுகத்தில் நடந்ததாக கூறும் புனை கதையான மகாபாரதம் கூட நிரூபிக்கவில்லை .மகா பாரதத்தில் கூட நாகலோகத்து நாகர்கள் குந்தி தேவியின் உறவினர்கள் நாகதீபத்தில் வாழ்ந்த தாக தான் அறிய முடிகின்றது .
ஈழத்தில் ஆரம்பத்தில் வாழ்ந்த நாகர்கள் பிற்காலத்தில்அரசர்கள் இராஜ ரட்டை என்று அழைக்க பட்ட ஈழத்தின் வடபகுதிலேயே அதிகமாக வாழ்ந்ததாக கருதப்படுகின்றது .இவர்கள் நாகதீபம் அதாவது யாழ்குடாநாடு கடலால் பிரியும் பூநகரிக்கு மேற்பட்ட பிரதேசம் யாழ் தீபகற்பம் இந்த பிரதேசத்தை 26 குறுநில அரசர்களை கொண்ட நாக அரசர்கள் நீதி தவறாமல் ஆண்டு வந்தார்கள் .இவர்கள் தன்னிறைவு கொண்டவர்காகவும் பண்டமாற்று மூலம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தவர்களாகவும் தங்களுடைய தனித்துவமான நாகரிக ஒழுங்கில் வாழ்ந்தவர்களாகவும் ,உறவுமுறைகளில் திருமண பந்தங்களை முறைப்பெண் திருமணம் ,செய்து வந்து வந்தார்கள் ,இயற்கை வழிபாட்டோடு சேர்ந்த தாந்திரிய சைவத்தின் சிவ சத்தி வழிபாட்டையும் நாக பாம்பினை வழிபடும் மரபினையும் கொண்டு இருந்தார்கள்
நாகர்கள் பேசும் மொழியாக தமிழ் மொழியை பேசினார்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நிய மொழிகளையும் சகோதர மொழிகளையும் பேசுபவர்களாகவும் இருந்து இருக்கலாம்
ஆரம்பத்தில் வாழ்ந்த யச்ஷர்கள் இனம் .இவர்கள் மாதோட்டம் எனப்படுகின்ற மன்னார் மேற் பகுதியிலும் அனுராத புரம் போன்ற காடுகளை அழித்து உருவாக்கிய பிரதேசங்களிலும் அந்த பிரதேசங்களை அண்டிய பிரதேசங்களிலும் வாழ்ந்தார்கள் .இவர்களும் தனித்துவமான இன அடையாளங்கள் கொண்டவர்கள். இவர்கள் குவேனியின் மூதாதையரின் வம்சத்தினை அரச வம்சமாக கொண்டு இருந்தாலும் ஒரு அரசை ஏற்றுகொள்ளும் மனபாங்கு இல்லாத காரணத்தால் ஈழத்தின் ஏனைய பிரதேசங்களையும் காடுகளையும் அழித்து அப்பிரதேசங்களிலும் தமது வாழ்விடங்கள் ஆக்கினார்கள் இதனால் ஈழத்தின் தென் பகுதியிலும் வாழ்விடங்களை அமைத்து கொண்டார்கள்,இவர்கள் உறவு முறை பந்தங்களில் தனித்துவமான பாரம்பரிய கட்டுபாடுகளை கொண்டு இருக்கவில்லை ,திருமண பந்தங்களில் யாரை வேண்டுமானாலும் மணந்து கொள்ளும் வழக்கத்தில் வாழ்ந்தார்கள் ,இவர்கள் இயற்கை வழிபாட்டோடு சத்தி வழிபாட்டையும் கொண்டு இருந்தார்கள் இவர்கள் ஏலு மொழியையும் தமிழ் மொழியையும் பேசினார்கள் பொருளாதாரத்தை இவர்களும் பண்டமாற்று மூலமும் தன்னிறைவு தொழில்களின் மூலமும் மேம்படுத்தி வாழ்தார்கள்.
இவர்களே அரை மொட்டை அடித்த நிலையில் நாடு கடத்தப்பட்டு வந்த விஜையனுக்கும் 700 தோழர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து ஈழத்தின் அழிவுக்கு உதவினார்கள் ,இது பற்றி பின்னர் விரிவாக பாப்போம்
அடுத்து ஆரம்பத்தில் வாழ்த்த குடிகள் ,,வேடர்கள், இடையர்கள் ,இவர்கள் காடுகளிலேயே வேட்டையாடி மர உரி தரித்தவர்களாக வாழ்ந்தார்கள் .இவர்கள் கொடிய விலங்குகளிடம் இருந்து மற்ற இனங்களை காத்தவர்கலாகவும் இருந்தார்கள் ,இவர்கள் பலகாலமாக தங்கள் தனித்துவத்தை இழக்காமலேயே இருந்தார்கள் இவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் ஈழத்தில் காடுகளில் வாழ்கின்றார்கள் இவர்கள் கதிர்காமத்தை அண்டிய காட்டு பகுதிகளில் வாழ்ந்ததாகவும் ,முருகப்பெருமானையும் ,இயற்கை தெய்வங்களையும் வழிபடும் முறையை கொண்டு இருந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் ,
ஈழவம்சத்தினர் தாங்கள் தங்களுக்கு உரிய தனித்துவத்தோடு ,தமது தேவைகளில் மற்றவர்களில் தங்கி வாளாமால் தம் நிறைவு செய்து ,தமக்கான நாகரீக ஒழுங்கில் இஷ்ட தெய்வங்களை வணங்கி வாழ்ந்து கொண்டு இருந்த வேளையில் தான் குற்ற தண்டனையாக அரை மொட்டை விஜயன் ,700 தோழர்களுடன் கி .மு 6 ம் நூற்றாண்டு அளவில் கலிங்க நாட்டில் இருந்து மாதோட்டத்தில் வந்து இறங்கினான் .
2-விஜயன் வரலாறும் அவன் வருகையும்
கலிங்கம் ,அதாவது மழையும் புயலும் அடித்தால் வெள்ள நிவாரணம் கேட்கும் இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலம் இது தான் மகாவம்சம் கூறும் சிங்களத்தின் தந்தை நிலம் ,,தாய் நிலத்துக்கு பாண்டி நாட்டு பெண்களும் இயக்க அரசி குவேனியும் பங்கு கேட்பதால் தாய் நிலம் எதுவென்பது குழப்பமாகவே இருக்கின்றது ,
விஜயனின் தாத்தா ஒரு காடுகளில் வாழும் ஒரு உண்மையான சிங்கம் விதிவசத்தால் வங்கதேசத்து குறுநில மன்னனுக்கும் கலிங்க இளவரசிக்கும் பிறந்த மகளை சிங்கம் திருமணம் செய்கின்றது ,அவர்கள் இருவரும் செய்த தவப்பயனால் இரு பிள்ளைகள் பிறக்கின்றனர் மகன் பெயர் சிங்க பாகு ,மகள் பெயர் சிங்க சிவலி ,,இவர்களின் தரம் கேட்ட பண்பாடு அன்றே ஆரம்பமாகின்றது அரசகுமாரனுக்கு நாட்டில் வேறு பெண்கிடைக்காமலோ என்னவோ எனக்கு புரியவில்லை தன் சகோதரியையே தான் திருமணம் செய்கின்றான் இவர்களுக்கு 16 இரட்டை பிள்ளைகள் மொத்தமாக 32….பிள்ளைகள் பிறக்கின்றார்கள் இவர்களில் மூத்தவனே விஜயன் இவனே கலிங்க நாட்டு பட்டத்து இளவரசன்
விஜயன் தன் தோழர்களுடன் சேர்ந்து நாட்டு மக்களுக்கு பல்வேறு வழிகளில் கெடுதல் செய்து துன்பங்களை கொடுத்தான். நாட்டில் மது மாது இவன் உடைமையாய் இருந்தது ,,மக்களை இவன் அடிமையாய் எண்ணினான் ..இதனால் துன்பம் அடைந்த மக்கள் சிங்கபாகு அரசனிடம் மகன் செய்யும் குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் படி கேட்டதால் ,மன்னன் தன் பாச மகன் தவறு செய்தவன், ஆயிலும் கொல்ல மனம் இன்றி தண்டனையாக விஜயனுக்கும் அவரது 700,,தோழர்கள் உதவியாளர்களுக்கும் அரை தலையை மொட்டை அடித்து கட்டாயபடுத்தி கப்பலில் ஏற்றி நாடு கடத்தினான் .
மகாபாரத்தில் வரும் நாசகாரி வஞ்சக சகுனியினதும் காந்தாரியுடையதும் பூர்வீகமே காந்தாரதேசம் ,.சிம்மபுர என்கின்ற இன்றைய ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடைப்பட்ட பகுதி, இங்கிருந்து புறப்பட்டு விஜயனும் அவன் தோழர்களும் திசை தெரியாத கடலில் மண் திடல் தேடி கி மு 543 இல் மாதோட்டத்தில் கரை ஒதுங்கினார்கள் ,,
பூர்வீக தமிழர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் இவர்கள் வந்திறங்கியதை ஏற்றுகொள்ள மனம் இல்லாத மாகாவம்ச புனை கதை திரிபு வாதிகள் தம்ப பன்னி என்கின்ற தென்பகுதியில் வந்து இறங்கியதாக கட்டு கதை விட்டார்கள் .இவ்வாறு நாடுகடத்தப்பட்டு வந்தவன் மாதோட்டத்தில் அரசாண்ட குலம் அதாவது ஆரியனிடம் கையூட்டு பெற்று இராமாயணம் எழுதிய கம்பன் ,இயக்கர் கோனை ,அரக்கர் கோன்,என்றான் அதுபோலவே அதே குல இளவரசி குவேனியை சாதாரண பெண்ணாக தேரர் மகாவம்சம் எழுதினார்
விஜயன் தன்னை சிறந்த அரசகுமாரனாக அங்கு அறிமுகம் செய்து நாடகமாடி குவேனியை மயக்கி திருமணம் செய்தான். ,சிற்றின்பத்தில் சீரழிந்து நாடுகடத்தப்பட்டு வந்த இவன் தமிழர் பண்பாட்டை மதிப்பானா ஒருவனுக்கு ஒருத்தி என்ற இலக்கண வாழ்வில் வாழ்வானா இல்லவே இல்லை .இயக்கர் குல அரசர்களை வஞ்சகத்தால் கொலை செய்து அவர்களுடைய அரசை கைப்பற்றி ,பாண்டி நாட்டு பெண்களை வரவழைத்து மறுமணங்கள் செய்தார்கள் .அன்றில் இருந்தே வந்தேறுகுடிகளான விஜயன் பரம்பரையோடு பாண்டியரும் வந்து சேர்ந்தார்கள் .பாண்டியர்கள் வந்திறங்கிய மாதோட்ட கடல்பரப்பு இந்தியாவின் பொருணை நதியை ஒத்ததாக இருந்ததாலேயே இவ்விடத்தை அவர்கள் தாமிர வர்னி அல்லது தாமிர பரணி என்று அழைத்தார்கள். இதை காரணமாக வைத்தே பிற்காலத்தில் கிரேக்கர்கள் இலங்கையை தப்ர பேன் என்று அழைத்தார்களோ தெரியவில்லை .இதை திரிவு படுத்தி தென்பகுதியோடு ஒப்பிடுகின்றார்கள் .
எலு மொழி பேசிய இயக்கர் குல மக்களோடு கலந்து உறவுகளை உருவாக்கினாலும் சிங்கத்தில் இருந்துவந்த இனம் என்ற தங்கள் அடையாளத்தை எடுத்துக்காட்ட எ லு மொழியோடு சேர்ந்து எவ்வாறு சிங்களம் உருவாகியது என்பதை பார்ப்போம் .
3-சிங்கள இனத்தினதும் சிங்கள மொழியினதும் தோற்றம்
ஒரு பாரம் பாரிய பூர்வீக இனத்துக்கு தங்கள் வாழ்வியலில் உள்ள கலை ,கலாச்சாரம் ,பண்பாடு, வழிபாட்டு முறை
மொழி ,உணவு முறை, என்பவற்றை மாற்றி கொள்ளவேண்டிய தேவை இருக்காது ,.அந்தவகையில் ஈழத்தின் பூர்வீக குடிகளாக இருந்த தமிழர்கள் தங்கள் கலாச்சார விளுமியங்களுடனேயே தனித்துவமாக வாழ்ந்தார்கள் ,
4-ஆண்ட பரம்பரையும் ஆப்கானிஸ்தான் விஜயனும் ,,,,
நாக தீபம் ,என்று பூர்வீக தமிழ் மக்களால் அழைக்கபட்ட ஈழத்தின் வடபகுதியில் வலிமை பெற்ற நாகர்களின் சாம்ராச்சியம் இருந்தது .குமரி கண்டமாக இருந்த காலத்தில் நாக நாடு என்றும் அழைக்கபட்டது. பின்னர் கடல்கோளால் அழிவுற்று எஞ்சிய பகுதி நாக தீபம் ,என்றும் பிற்காலத்தில் மணிபல்லவம் என்றும் அழைக்கபட்டது .குமரிகண்டமாக இருந்த காலத்தில் நாகர்கள் கடலுக்குள் கூட மிகப்பெரிய நாக ரத்தினங்களால் ஆன அரசமாளிகையை அமைத்து அரசாண்டதாக வரலாறுகள் உள்ளது ,இதனால் தான் ஈழத்துக்கு இரத்தினதுபீபம் என்று பெயர் வந்ததாகவும் இருக்கலாம் ,,மகாபாரதம் புனை கதை என்று நாம் எடுத்து கொண்டாலும் முழு பூசணிக்காயை ஆரியர் முழுமையாக மறைக்கவில்லை ,உதாரணமாக பாண்டவர்களில் ஒருவனான வீமனுக்கு நஞ்சுகலந்த பாயாசத்தை கொடுத்து மயங்கிய வீமனை பாயினால் சுற்றி துரியோதனனும் அவன் தம்பி துச்சாதனனும் கடலில் போட்டார்கள் .,அவனை நாகலோகத்து நாகர்கள் காப்பாற்றி கொண்டுவந்து விட்டார்கள் ., அப்பொழுது நாகலோகத்தை ஆண்டது ,பாண்டவர்களின் தாய் வழி தாத்தா என்பதும் மகாபாரதம் சொல்லும் கதை ,எங்கோ ஒரு முலையில் மறைக்க பட்ட உண்மை வேறு வழியில் வெளிவந்தது என்றும் எடுத்துகொள்ளலாம் ,,,இருந்தாலும் பல்வேறு வகையான சான்றுகளை வைத்து பார்க்கும் போது நாகர்கள் விஜயன் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த காலத்திலும் புத்தர் நாகதீபத்துக்கு வந்ததாக கருதப்படும் காலத்திலும் அதாவது கி மு 5 ம் 6 ம் நூற்றாண்டு காலத்திலும் ஈழத்தில் வல்லமை பொருந்திய அரசர்களாய் இருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை ,,,,
மகோதரன் என்ற நாக அரசன் மிகவும் வலிமையான அரசை கி மு 6 ம் நூற்றாண்டு அளவில் நாக நகர் அல்லது புண்ணிய நகர் என்று அழைக்கபட்ட இன்றைய யாழ்பாணத்தின் மேற்பரப்பில் இருந்து ஆண்டான் என்றும் இது பிற்காலத்தில் நாக குத்தன் அரசாண்ட வேளையில் கதிர மலை இராச்சியம் என்று அழைக்கபட்டது ,ஈழத்தின் மத்திய பகுதியின் மேற்பகுதியை அதாவது மணி மலை ,மகேந்திரமலை ,கண்ணவதமான மலை என்று சொல்லப்படுகின்ற பகுதியை மகோதரனின் தங்கையின் மகன் குலோதரன் ஆண்டதாகவும் தென் பகுதியில் கல்யாணி இராசியத்தை மகோதரனின் தாயின் சகோதரன் மணியசிகனும் ஆண்டதாக வரலாறு சொல்கின்றது ,,
வரலாறு இவ்வாறு சென்று கொண்டு இருக்கும் வேளையில் விஜயன் ,எவ்வாறு ஈழத்தின் முதல் மன்னாக இருக்க முடியும் ,திரிப்பு மகாவம்ச தேரரே சொல்கின்றார் ,30 வருடங்கள் ஆண்டான் என்றும் பின்னர் அரசாள வம்சம் இல்லாததால் தம்பி மகனை கலிங்க நாட்டில் இருந்து அழைத்தான் என்றும் இதில் இருந்தே தெரிகின்றது ,அவன் குவேனியின் சிற்றரசை அபகரித்து சிறிது காலம் பாண்டியரின் உதவியோடு ஆண்டு இருக்கலாம் ,ஆண்ட இராச்சியம் பற்றிய ஆதாரங்கள் பெயர் கூட இல்லாத இடத்தில் முப்பது வரிடம் ஈழத்தை ஆண்டான் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று , சிறிதுகாலத்தில் பின் இயக்கர்கள் நாகர்களின் உதவியுடன் விஜயனையும் அவனது தோழர்களையும் பாண்டிய பரிவாரங்களையும் முற்றாக அழித்து தமது நாட்டை மீட்டு இருப்பார்கள் என்று கருத இடம் இருக்கின்றது ,இதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை கருதுகோளின் அடிப்படையில் ஊகிக்க முடிக்கின்றது ,
ஒற்றுமையாக சிறந்த அரசியல் அடித்தளத்தோடு நாகர்களில் இருந்துதான் நாகரீகம் என்ற சொல் உருவாகியது என்று குறிப்பிடும் அளவுக்கு சிறந்த கலாசாரத்தோடு அரசாண்ட நாகர்களை பற்றி புத்த பெருமான் ஞானத்தால் உணர்கின்றார் இவர்களுக்கு ஒரு இருண்ட காலம் வரப்போவதை தெரிந்துகொண்ட புத்த பெருமான் நாகதீபத்துக்கு வருவதை மலரும் ஞானபோதனை துளிகளோடு பார்ப்போம்.
5-போதியத் திரு நிழல், புத்தரும் , ஞானபோதனை பெற்ற நாகர்களும் ,,,,
பௌத்தம் என்பது மதவெறியும் இனவெறியும் கொண்ட சில மனிதர்கள் சொல்வது போல் ஒரு மதம் அல்ல ,,.மனித மனத்தின் ஆழ்ந்த அறிவின் மூலம் பௌகுத்து அறிந்து கொள்ளும் தெளிவான அறிவியல் ஞானம் ,,புத்தம் என்பது உண்மையை உணர்தல் என்பதால் பௌத்தமும் புத்தமும் ஒன்றாகின்றது ,,,உண்மையை உணர்ந்தவர் என்பதால் சித்தார்த்தர் ,,புத்தராகினார் .,அந்த வரலாற்றை பார்ப்போம்,
உலகில் ஒரே ஒரு இந்துக்களின் தேசம் என்று இன்று சொல்லப்படுகின்ற நேபாளத்தில் உலும்பினி என்ற இடத்தில் சாக்கிய குல மன்னர் சுத்தோதனருக்கும் மாயாதேவிக்கும் அரச குமாரனாக சித்தார்த்தர் கி மு 563 ஆண்டு வைகாசி மாதம் முழு நிலா நாளில் பிறந்தார் . புத்தர் பிறந்த இடம் வட இந்தியாவின் ஒரு பிரதேசமாய் முற்காலத்தில் இருந்தது .,சித்தார்த்தர் முறைப்படி போர் பயிற்சிகளையும் பெற்றார் .,முறைப்படி முறைப்பெண் யசோதை யை திருமணம் செய்து இல்லற வாழ்விலும் இணைந்து இருந்தார். இவர்களுக்கு இராகுலன் என்றொரு மகனும் பிறந்தான் .இவ்வாறு மகிழ்சியாக வாழ்ந்து வந்த சித்தார்த்தர் நகர உலாப்போகும் வேளையில் மனித வாழ்வின் பிறப்பில் இருந்து இறப்பு வரையான சகல காட்சிகளையும் கண்டார் கண்ட காட்சிகள் அவரை சிந்திக்க வைத்தது ,,இல்லற வாழ்வில் இருந்து விடுபட்டு துறவி ஆகின்றார் ,,,உருவலோ என்ற காட்டில் ஆல மரத்தின் கீழ் இருந்து 6 வருடம் தியானம் செய்தார் ,,,அந்தவேளையில் சுயாதை என்று ஒரு பெண் ஒரு பாத்திரத்தில் பாயாசம் கொண்டு வந்து ஆலமரத்தின் கீழ் இருந்த புத்தரிடம் பாயாசத்தை கொடுத்து சென்றாள்,. அதாவது அந்த பெண் சிறந்த கணவரும் சற் புத்திரனும் தனக்கு கிடைத்தால் ஆலமரக்கடவுளுக்கு அமுது கொடுப்பதாக நெய்வேத்தியம் வைத்து இருந்ததால் ,ஆலமரத்தின் கீழ் அந்த வேளையில் புத்தர் தியானத்தில் இருந்ததால் அவரிடம் கொடுத்தாள்…
சுயாதை கொடுத்த பாயாசத்தை எடுத்து சென்று ஒரு அரச மர நிழலில் இருந்து பருகினார் . பருக பருக பாயாசம் குறையாததை கண்டு வியப்புற்றார் . விரும்பிய வேளைதோறும் அந்த இனிமையான பாயாசத்தை அருந்தினார் . .இவ்வாறு 49 நாட்கள் குடித்த பின் பாயசத்தோடு அந்த பாத்திரத்தை நதி நீரில் விட்டு விட்டு தான் ஞானம் பெற்றவராக இருந்தால் அந்த பாத்திரம் நீரோட்டத்துக்கு எதிர் திசையில் செல்லவேண்டும் என்று தன மனதில் நினைத்து கொண்டார் .. அவர் நினைத்தது போலவே பாத்திரம் நீரோட்டத்துக்கு எதிர்திசையில் வேகமாக செல்வதை உணர்கின்றார் ,,,இந்த அதிசயத்துக்கு பின் அரச மரநிழலில் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்து உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி மீண்டும் தியானத்தில் இருந்தார் .. இவரது 36 வயதில் உலக பற்றுகளில் இருந்து முற்றாக விடுதலை அடைந்து நிர்வாண நிலையை அடைகின்றார் . அதாவது நான். தான். தனது.என்ற நிலையில் இருந்து விடுபடுதல் உலக பற்றுகளில் இருந்து முற்று முழுதாக விடுபட்டு ஞான ஒளியாக எண்ணற்ற உண்மை தத்துவங்கள் நிறைந்த மனிதராக ,புத்தராக ஞானம் பெறுகின்றார் ,,
உலக நலன்களுக்காக தான் அறிந்த மெய் ஞானத்தை மக்களுக்கு அன்புடன் பரிமாறி உலக மக்களை நல்வழி படுத்த விரும்பிய புத்தர் .பல தேசங்களுக்கும் பயணங்களை மேற்கொள்ள எண்ணியவராய் .நீரில் விட்ட பாத்திரம் சென்ற திசையில் புறப்பட்டு வந்தார் . நீரோட்டத்தில் எதிர் திசையில் பயணித்த அட்சய பாத்திரம் ஈழத்தின் நாகதீபத்தின் சிறு தீவொன்றில் கரை ஒதுங்கியது ,உண்மை ஞானத்தை பெற்ற ஞானபோதி புத்தர் இதை அறியாமலா இருந்திருப்பார் .அதுவே அவர் நாகர்கள் வாழும் நம் ஈழ தேசத்தை காண அவரை இங்கே அழைத்துவந்தது என்றால் மிகை ஆகாது .மணி தீவுக்கு வந்து புத்தர் ஒரு ஆற்றோரமாய் கிடந்த அட்சயபாத்திரத்தை ஒரு சிறுவன் கையில் கொடுத்தார் பசித்தோர்க்கு உணவு அளிக்கும் படி அச்சிறுவனுக்கு அன்பாக சொன்னார் .அனைவருக்கும் உணவு அளிக்க கூடிய அட்சய பாத்திரம் மணித்தீவில் இருந்தாலும் ,வறுமை அவர்களை நெருங்காது என்று அந்த ஞானி உணர்ந்து இருந்தாலும் ,சகோதர அரசுகளுக்கு இடையில் மிக பெரிய போர் ஒன்று தொடங்க போவதை உணர்ந்த புத்தர் ,புண்ணிய பூமி ,புண்ணிய நகர் .என்று பண்டைய நாளில் அழைக்க பட்ட நாக தீபத்தின் மேற் பகுதிக்கு சென்றார் . .
ஏற்கனவே சொல்லி விட்டேன் பௌத்தம் என்பது புத்தர் வாழ்ந்த காலத்தில் ஒரு மதம் அல்ல ,புத்தர் என்பவர் அறிவியல் தத்துவங்கள் உண்மைகள் தெரிந்த ஒரு மகானே தவிர ஒரு கடவுள் அல்ல ,உலக வரலாற்றில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக ஈழத்துக்கு வந்த முதலாவது பெருமகன் என்று சொல்லலாம் ,நாக அரசர்கள் குலோதரனும் ,அவன் மாமன் மகோதரனும் ,,மகோதரனின் தந்தை அரசாண்ட காலத்தில் இருந்த நவ இரத்தினங்களால் செய்யப்பட்ட பீடத்துக்காக போராட தயாரானார்கள் போராட தயாரான வேளையில் தான் புத்தர் அங்கு பேரொளியுடன் தோன்றினார் பேரொளியை கண்ட நாகர்கள் .போரை நிறுத்தி புத்தரை அணுகினர் ,புத்தர் அவர்களுக்கு போதனை செய்தார் .நாம் இன்னொருவருடைய பொருளுக்கு ஆசை கொள்ளல் ஆகாது .ஆசையே வாழ்வியலில் துன்பங்களை வரவைக்கின்றது . வணக்கத்துக்கு உரிய இந்த நவரத்தின பீடம் உங்களுக்கு உரிமை ஆனது அல்ல . உங்கள் மூதாதையினரால் பேணி பாதுகாக்க பட்டு மட்டும் வந்தது . இதை நானும் ஏற்றுகொள்ள முடியாது .இது அனைத்து குடிகளினதும் வணக்கத்துக்கு உரியது .உங்களுடைய மணித்தீவில் இருக்கும் உலகமகாதேவி நாக ராஜேஸ்வரி அமர்ந்திருந்த சக்தி பீடம் .என்று அதன் அடையாளங்களை அறிமுகம் செய்து பெண் தெய்வத்துக்கு உரியது என்பதையும் தெளிவு படுத்தி இது இந்திரனால் சக்திக்கு அமைத்த திருக்கோவிலில் சக்தி பீடத்தில் இருந்தது என விளக்கம் அளித்து முறைப்படி அதை வைத்து வணங்குமாறு கூறி சென்றார் ,,,,,,
ஈழத்தில் பூர்வீக மக்களின் கலை கலாசாரம் பண்பாடு உறவு முறை ,வழிபாட்டு முறை பற்றி பார்ப்போம் .
6-உலகில் நாகரீகத்தை தோற்றுவித்த ஈழத்து பூர்வீக தமிழ் மக்கள் ,,,,
நாகரீகம் என்ற சொல் நாகர்களிடம் இருந்தே தோன்றியது என்பது எனது பலமான கருத்து .நாணயம் என்ற நேர்மையை உலக மக்களுக்கு அவர்களே சொல்லிகொடுத்தார்கள் என்பது ஒரு சிறு குறிப்பு ,ஆரியர்கள் ,,,அதாவது இந்தியாவுக்கு வந்தேறிய குடிகளும் வட இந்தியர்களும் சேர்ந்து புனைகதை இதிகாசங்களும் கற்பனை கதைகளும் ,புளுகு புராணங்களும் எழுதி திராவிட மக்களின் பெரும் தொகையினரை.. ஆரியர்களாக மாற்றினார்கள். ,சைவத்தை ஆறு பிரிவாக்கி இந்து மதத்தின் ஆறு பிரிவுகள் என்று மார்பு தட்டினார்கள் . அது போலவே தென் இந்தியர்கள் ,திராவிடர்கள் என்று ஒரு கலப்பு பெயரை உருவாக்கி தமிழராகிய நாகர்களிடம் இருந்த நாகரீகத்துக்கு சொந்தம் கொண்டாடி தமிழர்களை திராவிடர்களில் ஒரு பகுதி ஆக்கினார்கள் . ,சிந்து வெளியை கருவாக கொண்டு நாகரீகத்துக்கு உரிமை சாசனம் எழுதுகின்றார்கள் .
அதாவது சிந்து வெளிகாலம் என்று அவர்கள் சொல்வது இரண்டாவது மிகப்பெரிய கடல் கோள்(சுனாமி ) உருவாகிய காலமான கி மு 2387 இற்கு சிறிது காலத்துக்கு முன்னம் ,(சிந்து வெளிகாலம் கி மு 3250 —2400 ) இந்த கடல் கோளில் போது தான் இலங்கை இந்தியாவில் இருந்து பிரிந்த தாக சொல்லும் இவர்கள் திரேதா யுகத்தில் இராமன் பாலம் போட்டது பற்றியும் சொல்கின்றார்கள் .கம்பர் கற்பனையை விற்று பொற்காசு சம்மாதித்ததாக நாம் கருதினாலும் அவர் தமிழர்களையும் அன்றே விற்க முயற்சித்து இருக்கின்றார் .இதிகாசங்கள் பொய் என்று வாதிடும் வேளையில் நான் இராமன் என்றும் இராவணன் என்றும் அரசர்கள் இருக்கவில்லை என்று வாதிட வில்லை உண்மை கதையை ஆரியர் சார்பாக மாற்றி எழுதி இருக்கின்றார்கள் என்று தான் சொல்ல முனைகின்றேன் .
நாகரீகம் ஈழத்தை தாயகமாக கொண்ட தமிழர்களுடையது என்று நிறுவ முற்படும் நான் அதன் தோற்றப்பாடு பற்றிய விளக்கத்தை கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் சில விடயங்களை மேற்கோள் காட்ட வருகின்றேன் .உலகில் உயிர் இனங்கள் தோன்றியதாக கருதப்படும் காலமாக கி மு 21000 ஆண்டையும் மனிதர்கள் தோன்றியதாக கருதப்படும் காலமாக கி மு 16000 ஆண்டு பகுதியை ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் ,இந்த காலத்தை அடிப்படையாக வைத்தே நம் முன்னோர்கள் உலக வாழ்வை 5 யுகங்களாக வகுத்தார்கள் அதாவது கிருத ,திரேதா, துவாபர, கலி, சதுர், என பெயரிட்டார்கள் ஆண்டுகணக்காக அவர்கள் சொல்லும் கணக்கு அவர்கள் நாளிகைகைளை அடிப்படையாக கொண்டு கணித்தார்களோ புரியவில்லை இலட்சக்கணக்காக உள்ளது இதை எனக்கு தெரிந்த வகையில் யாரும் நிரூபிக்கவும் இல்லை.இவ்வாறு அதிகம் ஆண்டை சொன்னால் உண்மையை யாரும் கண்டு பிடிக்க மாட்டார்கள் என்றும் ஆரிய குள்ள சிந்தனையாளர்கள் கணக்கிட்டு இருக்கலாம் , இருந்தாலும் பின் வந்த அறிவியல் ஆய்வியல் ஆளர்கள் சூரியன் சுற்றும் வருடங்களாக வகுத்தார்கள் ,அதாவது கிருத யுகம் 12000 வருடங்கள் என்றும் திரேதா யுகம் 2400 வருடங்கள் என்றும் துவாபர யுகம் 3600 வருடங்கள் என்றும் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் கலியுகம் 5800 வருடங்கள் என்றும் அடுத்து வரபோவது சதுர் யுகம் 12000 வருடங்கள் என்றும் இவர்கள் கணிதத்தின் படி அதாவது நான் இந்த கட்டுரை எழுதும் 2012 ஆண்டு நாம் கலியுகத்தின் 5120 வருடத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் .
இதிகாசங்கள் இனிமையாக பொய்யை ஆரிய அரசியல் ஆளர்களுக்கு சார்பாக கற்பனையில் வரைந்து இருந்தாலும் ..புராணங்கள் புளுகி புனைந்து எழுதியதாக இருந்தாலும் ,இவற்றில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஒரு உண்மை கதை எதோ ஒரு இடத்தில் மறைந்தே இருக்கின்றது ,இராமாயணத்தில் வரும் இராவணன் ஈழதேசத்தை ஆண்ட இலங்கேஸ்வரன் இவன் வாழ்ந்ததாக கருதப்படும் காலம் திரேதா யுகம் ஆகும் அதாவது கி மு 6700 காலப்பகுதி ஆகும் ,கி மு 21000 இல் இருந்து கி மு 16000 வரை கடல் வாழ் உயிர் இனங்கள் தோன்றிய காலமாகவும் கி மு 16000 இல் இருந்து கி மு 7000 ஆண்டு வரை ஆன காலப்பகுதி கற்காலம் என்றும் கி மு 7000 ஆண்டுக்கு பின்னரே நாகரீகம் உருவாகிய காலம் என்றும் கருதப்படுகின்றது இந்த காலத்தின் ஆரம்பத்திலேயே முதலாவது கடல் கோள் உருவாகி இலங்கை இந்தியாவில் இருந்து பிரிந்து இருக்கலாம் என்று கருதப்படுகின்றது .ஆனாலும் குமரிக்கண்டத்தில் சில நாடுகளுடன் இணைந்தே இருந்தது- குபேரனும் பின்னர் அவன் தம்பி இராவணனும் ஆண்ட இலங்கை என்று சொல்லப்படுகின்ற நாடு இன்றைய இலங்கையை விட எழு மடங்கு பெரியது என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றது
குபேரன் இராவணன் ஆண்டதாக கருதப்படும் கருதப்படும் திரேதாயுகம் அதாவது கி மு 6700 காலப் பகுதியில் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்கள் .ஆகாய கடல் விமானம் கப்பல்கள் கோட்டை கோபுரங்கள் வழிபாட்டு தலங்கள் என சிறந்த கட்டுகோப்பான நாகரிக வாழ்கையை வாழ்தவர்கள் என்ற கருத்து தெளிவாகிறது .எனவே எம் முன்னோர்கள் அதற்கு முந்திய காலத்தில் இருந்தே சிறந்த நாகரிக வாழ்கையை வாழ்தவர்கள் என்று கருதப்படுகின்றது ,எம்மிடம் இருந்து நாகரீகத்தை கற்று கொண்ட மக்களே இந்தியாவிலும் உலகில் பல்வேறு பகுதியிலும் வாழ்கின்றார்கள் .இந்த காரணத்தினாலேயே எம்மை முற்றாக அழித்து குமரி கண்ட சுனாமிகளால் அழிந்த நமது உறவுகளான 80 கோடி மக்களோடு இறந்தவர்கள் கணக்கில் சேர்த்து விட்டு நமது நாகரீகத்துக்கு முழு உரிமை கொண்டாட நினைக்கின்றார்கள் ,.
அடுத்து ஈழத்தில் கட்டிட கலை பற்றி நாம் நாம் எடுகோள்களை எடுத்து பார்ப்போமானால் ஈழத்தை திரு மூலர் சிவ பூமி என்று மூவாயிரம் வருடங்களுக்கு முன்னம் சொன்னார் .திருமூலர் கரும் குழலி தம்பதிகளின் மகனே மயன் இவர் ஒரு சிறந்த கலை நிபுணர் இவர் தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும் பெரும் தொண்டாற்றியவர் .இவர் ஈழத்து தலங்களை தருசிக்க வந்த வேளையில் திருக்கேதீச்சரத்தை புதுப்பித்து கட்டியதாக வரலாறு சொல்கின்றது .அந்த காலத்தில் திருக்கேதீச்சரம் ,முன்னேச்சரம் , நாகேச்சரம் ,நகுலேச்சரம் ,நாக பூசணி அம்மன் , தொண்டீஸ்வரம் கோணேஸ்வரம் போன்ற ஆலயங்களும் வேறு சில வழிபாட்டு தலங்களும் இருந்திருக்கலாம் .இவற்றில் சில ஆலயங்களை மயன் தரிசித்து இருக்கலாம் இந்த ஆலயங்கள் கலை நுணுக்கங்கள் சிற்பங்களில் பூர்வீக வரலாறு கொண்ட ஆலயங்களாக இருந்தன என்று பல்வேறு ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் மேலும் கதிரை மலை இராட்சியம் என்று சொல்லப்படுகின்ற நாகர்களில் கோட்டை இன்றைய கந்தரோடையில் மிகப்பெரிய அளவில் கட்டபட்டு இருந்ததாகவும் பூநகரி பகுதியில் மிகப்பெரிய கடல் கோட்டை இருந்ததாகவும் கல்யாணி இராசியத்திலும் கோட்டை இருந்ததாகவும் வரலாறுகள் மேற்கோள் காட்டுகின்றது அது மட்டுமன்றி வேடுவர் குலத்தவர்கள் மலைகளை குடைந்து சிறிய கோட்டைகள் கட்டி இருந்தார்கள் என்றும் இவர்கள் மலை கோட்டைகளுக்கு உள்ளேயே பிற்காலத்தில் சிங்களவர் என்று தம்மை காட்டி கொண்ட அரசர்கள் மறைந்து இருந்து தமிழ் மன்னர்களுக்கும் மக்களுக்கும் இடை இடை துன்பம் விளைவித்தார்கள் அறியபடுகின்றது மற்றும் வேடர்கள் மலைகோவில்கள் கட்டி வழிபட்டார்கள் இந்த வழிபாட்டு முறையை வைத்தே குன்று தோறும் குமரனை வழிபடும் முறைய எம்மவர்கள் கற்றுகொண்டார்கள் . அந்தவகையில் ஈழத்து பூர்வீக மக்கள் சிறந்த வழிபாட்டு தலங்களை கொண்டு இருந்ததோடு கட்டிட கலையில் சிறந்தவர்களாகவே இருந்திருக்கின்றார்கள் என்ற கருத்து வலிமை பெறுகின்றது,
பூர்வீக ஈழத்தவர்களின் பெயர்கள் உறவு முறை பற்றி பார்ப்போமானால் .நாகர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் நாக என்ற சொல்லை பல்வேறு கட்டங்களில் பயன்படுத்தி இருக்கின்றார்கள் ,நாட்டை நாக நாடு என்றும் நகரத்தை நாக தீபம் என்றும் தீவை நாக தீவு என்றும் அரசர்களை நாக ராஜா என்றும் அரச குல பெண்களை நாகச்சியார் என்றும் அழைத்தார்கள் ,இந்த நாகச்சியார் என்ற முறையே பிற்காலத்தில் நாச்சியார் என்று அழைக்கும் முறையாக வழக்கத்தில் மருவி வந்தது ,பொதுவாக மக்களின் பெயர்களை பார்ப்போமானால் நாகப்பன் நாகேஸ்வரன் ,நாகலிங்கம்., நாக முத்து ,நாக ராஜா ,நாகம்மாள் நாக ராணி , நாக பூசணி நாக லட்சுமி ,நாக ரூபினி நாக வள்ளி என்று நாக என்ற பொது பெயர்பட வைத்தார்கள் அதுபோலவே இயக்கர்களும் சிவ ஈசன் ஈஸ்வரி என்ற என்ற பொருட்பட பெயர்களையும் ,வேடர்கள் ,தங்கள் குல பெயர்களாக வேலன், வேலாயுதம் ,தேவன், தேவி ,முருகன் என பொது பொருள் பட பெயர்களையும் வைத்தார்கள் இவற்றை இன்றைய யதார்த்தத்தோடு நாம் சேர்த்து பார்த்தாலும் பொருந்துகின்றது
சிறப்பான வாழ்வை வாழ்ந்த பூர்வீக மக்கள் பல்வேறு கட்டங்களில் ஏற்பட்ட கடல் கோள்களாலும் (சுனாமி )பல்வேறு இயற்கை அழிவுகளாலும் பல்வேறு சந்தர்பத்தில் பாதிக்க பட்டாலும் தப்பி பிழைத்தவர்கள் மீண்டும் நாட்டை ஒழுங்கமைத்து வாழ்தார்கள்,,,கி மு 6 ம் 5 ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஆரிய அந்நிய படை எடுப்புக்களும் வேற்று நாட்டவர்களின் நுளைவுகளும் இவர்களுக்கு மிகப்பெரிய பிரட்சனையாகிபோனது ,,,,இந்த வேளையில் தான் “வெல்பவன் வாழ்வான்”அவனே ஆள்வாள் ” என்ற உண்மையை உளவியல் ரீதியாக உணர தொடங்கினார்கள் ,,,,,அந்த நேரத்தில் தான் ஈழ வம்சத்தினரின் அதிகாரம் சில இடங்களில் மாறத்தொடங்கிய அரசியல் பாதையின் ஓரத்தில் பயணிப்போம்.
7-வம்சமே இல்லாமல் இறந்த விஜயனிடம் இருந்து வந்த குடி எங்கே ?,,,,
நவீன உலகில் ஆராய்சிக்கு உரிய விடயங்களாய் இருந்தாலும் கந்த புராண சூரனும் ,இராமாயண இயக்கர் வேந்தன் குபேரனும் இராவணனும் ,,ஈழத்தை முழுமையாய் ஆண்டதற்கு பின்னர் எந்த ஒரு குலத்து அரசனுமே பிரித்தானியரிடம் கண்டி இராசியம் தோல்விகாணும் வரை முழுமையாக ஈழத்தை ஆண்டதாக வரலாறு இல்லை ,,அதிலும் எல்லாளனின் மூதாதையரின் இராசரட்டை என பிற்காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய கந்தரோடையில் இருந்த கதிரை மலை அரசு ஒல்லாந்தர் யாழ்பாணத்தை கைப்பற்றும் வேளையில் தான் முதல் முதலில் வீழ்சிகண்டது என்பதையும் கூறிவிட விரும்புகின்றேன் ,,எல்லாளன் என்ற நாகர்குல தமிழ் அரசன் மட்டுமே 96 குறுநில மன்னர்களுக்கு அரசனாய் இருந்து ஈழத்தின் பெரும்பகுதியை ஆண்டான். இதை எல்லாளன் வரலாறு வரும் வேளையில் விரிவாக பார்ப்போம்,,,,
சிங்கத்தில் இருந்துவந்ததாக புனைந்து சொல்லப்பட்ட சிங்கராஜா விஜயன் இறந்தான் என்று மட்டும் ஒருவரியில் மகாவம்ச தேரர் சொன்னால் என்ன அர்த்தம் ,வயிற்று குத்து வந்து வாந்தி எடுத்தா விஜயன் இறந்தான் ,சிங்கம் குகையில் குல பெண்ணுடன் குடும்பம் நடத்தியது என்பதை நா கூசாமல் சொல்லும் தேரர் .சிங்கத்தின் பேரன் விஜயன் ,தமிழ் நாக அரசர்களுடனான போரில் முதுகில் அம்பு பட்டு முன்புறமாய் விழுந்து மூக்கு உடைந்து தான் இறந்தான் என்று ஏன் சொல்லவில்லை ,இருந்தாலும் என்னாலும் இதை நிரூபிக்க முடியாமல் தான் உள்ளது ,தேரர் மறைத்ததில் இருந்தும் தெளிவாக சிந்திப்பதில் இருந்தும் தமிழ் நாக அரசர்கள் ஈழத்தின் பெரும் பகுதியை அந்த வேளையில் ஆண்டார்கள் என்பதில் இருந்தும் ஊகிக்க முடிகின்றது ,
.
ஒன்றாக ஒற்றுமையாய் ஆண்டுவந்த அரசுகளை பிரித்து ,குடிகளின் நன்மைக்காய் ஆண்டுவந்த ஈழவம்சத்தினரின் ஒரு குலவிளக்கு குவேனியை ,குள்ள நரியாய் கள்ளவேலைகளும் காம லீலைகளும் செய்து தண்டனை பெற்று உயிர் தப்பி வந்த ஆப்கானிஸ்தான் அநாகரீக விஜயன் மாயங்கள் செய்து மயக்கி ,திருமணம் செய்து அரசை கைப்பற்றியதும் பின்னர் பாண்டிய பெண்களை திருமணம் செய்து விட்டு , குவேனியை கொலை செய்ததை ,பரம்பரை பரம்பரையாய் ஈழத்தில் வாழ்துவந்த,நம் பூர்வீக மக்கள் சும்மாவா விட்டு இருப்பார்கள் .அதுவும் பாரதப்போருக்கு முதல் மாவீரன் அரவனை பெற்ற ஈழத்து தாய்குலத்தை, (இது நான் சொல்லவில்லை வியாசர் சொன்னவர் )வந்தேறு குடியாய் வந்து வாழ்க்கை பட்ட விஜயன் கொன்றால் சும்மாவா விட்டு விடுவார்களா ,, ,எனவே உண்மை இன்றும் ஊமையாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய விடயம் இது .ஏன் என்றால் மகாவம்சம் சொல்கின்றது புதிதாய் உருவாகிய புத்தளத்தை தலை நகரை கொண்டு விஜயன் இலங்கை முழுவதையும் ஆண்டான் என்று ஆனால் அவன் எவ்வாறு மாண்டான் என்பது அவர்களுக்கு தெரியாது . ,சிற்றின்ப சிந்தனையில் உணர்வுகளை தவற விட்டு தனக்கென்று பல மனைவி இருந்தும் ,ஒரு பிள்ளை இல்லாதவன் ,இலங்கையை நீதி தவறாமல் ஆண்டான் என்று சொல்லுவதை யாரால் நம்ப முடியும். எனவே இவன் ஒரு மதத்தையோ ஒரு இனத்தையோ மொழியையோ ஒரு கட்டுகோப்பான நாகரீகத்தையோ பின்பற்றிய மனிதனாக கூட இருக்கவில்லை என்பதே உண்மை. தன்னை இராஜ குமாரன் என்று காட்டிகொண்ட விஜயன் குவேனியின் அரசை அபகரித்து அதை தக்க வைப்பதற்கு பாண்டியர்களுடன் நட்புறவு பூண்டு பாண்டி நாட்டு பெண்களின் வாழ்வையும் சீரழித்து குவேனியையும் கொன்று விட்டு பாண்டியர்களையும் நாட்டுக்குள் வர வைத்து விட்டு ,இயக்கர்கர் நாகர்களுடனான சண்டையில் வம்சமே இல்லாமல் இறந்தான் என்பதே ஈழவம்சம் சொல்லும் உண்மை-
விஜயனிடம் குவேனி திருமணத்தால் இழந்த அரசை கைபற்றியதாக கருதப்படும் நாகர் குல இளவரசன் உபத்தீசன் மாதோட்டத்தில் உபத்தீச நகர் என்ற பெயரில் அரசாண்டான் இவன் அதே அரசை 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டும் இவனை ஈழத்தை ஆண்டதாக மகாவம்ச வரலாறு சொல்லவில்லை ,இவனது காலத்திலேயே திருக்கேதீச்சரம் புனரமைக்கபட்டது ,இதை எமது சில தமிழ் ஆய்வாளர்கள் மகாவம்ச மாயையில் இருந்து விடுபடாமல் ,விஜயன் காலத்தில் முதல் மந்திரியாய் இருந்த உபத்தீசன் புனரமைத்தாக சொல்கின்றார்கள் ,இவனது காலம் கி மு 474 வரை என்று கருதப்படுகின்றது ,இவனது ஆட்சிகாலத்திலேயே பாண்டி நாட்டில் இருந்து பண்டு வாசன் என்பவன் பழிதீர்க்கும் முகமாக பெரும் படை திரட்டி வந்து தாமிர பரணி என்று பாண்டியர்களால் அழைக்கபட்ட மாதோட்டத்தில் தரை இறங்கி உபத்தீச நகரை கைப்பற்றியதாக வரலாறு சொல்கிறது
இந்த பாண்டிய பண்டு வாசனையே சிங்கள பிரிப்பு மகா வம்சம் விஜயனின் தம்பி சமிந்த வின் மகன் என்று உரிமை கொண்டாடுகின்றது .மகதமும் கலிங்கமும் சேர்ந்த காந்தார தேசமான ஆப்கானிஸ்தானில் சிங்கத்தின் குகையில் இருந்து தப்பி வந்ததாக சொல்லும் இனம் உண்மையில் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை அறிந்தும் அறியாதவர்களாய் வாழ்கின்றார்கள் ,வளரும் தொடரில் ஈழவம்ச தனித்துவமான தமிழர்களை பற்றியும் , ஒருபகுதி தமிழர்களோடு கலந்த பாண்டியர்களை பற்றியும் பாண்டியர்களோடு கலந்த விசயனுடைய தோழர்களின் வம்சத்தினரை பற்றியும் ,தொடர்புகளை தொடர் நிகழ்வோடு பார்ப்போம்.
8-ஈழத்தின் வம்சத்துக்கு உரியவர் யார் ?
ஈழத்தின் வம்சத்துக்கு உரியவர் யார் ?என்று அவர்களின் பூர்வீக வரலாற்று நிரோட்டத்தில் எத்திசையில் பார்த்தாலும் பல கோணங்களில் நிரூபிக்கபடுகின்றது தமிழர்கள் என்றே! ஆனால் தமிழர்கள் தங்கள் தனித்துவத்தை ஏன் இழந்தார்கள்? எப்போது இழக்க தொடங்கினார்கள் ?என ஆய்வு ரீதியாக வரலாற்று பாதையில் தேடி பார்க்கும் போது பல நம்பமுடியாத அதிர்சி தரும் தகவல்கள் எம்மை நாடி வருகின்றது என்பதும் உண்மையே! அந்தவகையில் எண்பது கோடி தமிழர்கள் வாழ்த்த குமரி கண்டத்தின் கடல் அழிவுக்கு பின் எஞ்சிய பதின்நான்கு கோடி தமிழர்களில் இராவணன் ஆண்ட இலங்கையில் வாழ்ந்த ஒன்பது கோடி தமிழர்களும் எங்கே ? என்ன ஆனார்கள் ?இரண்டு கோடி சிங்களவர் எங்கிருந்து வந்தார்கள் ? இவர்கள் யார் ? இவர்கள் எவ்வாறு ஈழத்தில் வாழ்த்த ஒன்பது கோடி தமிழர்களையும் அழித்தும். நாடுகளில் அலைய விட்டும் தமிழர்களின் எண்ணிகையை முப்பது இலட்சத்திக்குள் ஈழத்துக்குள் முடக்கி விட்டார்கள் ?இவற்றுக்கு எல்லாம் விடை தேடி களைத்த ஏன் சோர்ந்த விழிகள் தரும் தமிழ் மொழியிலான இந்த கருத்துக்களை நீங்களும் ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் ஊகங்கள் நிதர்சனம் என்று நிற்சயமாக புரியும் .!
இல்லாத மொழி ஒன்றை பொல்லாத பொய்களை சொல்லி உருவாக்கிய சிங்களம் .பௌகுத்தறிந்து உண்மையின் வழி நின்று உயிர்களுக்கு உதவும் படி சொன்ன ஞானியாகிய புத்தரை கடவுளாய் புனைந்து பௌத்த மதம் என்ற மாயையை புகுத்தி
மனித மனங்களை மாற்றி ஒரு புதிய இனமாய் உருவாகியதே சிங்களவர் .இவர்கள் ஒரே ஒரு இரவில் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் இல்லை .விடலை விஜயனாய் பெரும் கடலை தாண்டி வந்து தமிழர் வாழ்வில் முதலில் விஷத்தை வசியம் செய்து குவேனி என்ற பெண்ணில் விதைத்து அவள் அரசை கைப்பற்றி அவளையும் கொலை செய்து வம்சமே இல்லாமல் மாண்ட அவனிடம் இருந்து ,மட்டும் வரவில்லை.பல்வேறு சந்தர்பங்களில் படை உதவிக்காகவும் பல தார திருமணம்களுக்காகவும் வந்தேறு குடிகளாக வந்த பாண்டியர்களுடன் கலந்த தமிழர்களும் விஜயனின் தோழர்களின் பரம்பரையினரும் சேந்தவர்களே இன்று நாடாளும் சிங்களவர்கள் .இந்த உண்மையை பல்வேறு குறிப்புக்கள் எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் நன்றாகவே அறிவார்கள் தெளிவாகவும் உணர்ந்தார்கள் ஆனால் சில இடங்களில் ஒரு மன மாயையில் ,ஒரு பகுதி தமிழர்களும் பாண்டியர்களும் கலந்து தான் சிங்களவர் என்ற இனம் உருவாகியது என்பதை எழுதினால் இனவெறி குறும் சிந்தனை பிடித்த சமுதாயம் ஏற்று கொள்ளாது என்று நினைத்து உண்மையை எழுதாமல் பல வழிகளில் மறைத்தார்கள் .வேறு சில எழுத்தாளர்கள் உண்மையை எழுதினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று எழுதாமல் தவிர்த்தார்கள். .மற்றும் சிலர் மகாவம்ச மாயையில் நின்று வெளி வராமல் ஈழத்தில் ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள வரிகளையே இலங்கை அரியணையில் உள்ள ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டு எழுதினார்கள் .
விஜயன் வந்தகாலத்திலேயே ஈழத்து தமிழ் அரசர்களுடன் சண்டை செய்வதற்கு படை உதவியவர்கள் இந்திய பாண்டியர்களே! அன்றில் இருந்து ஈழ வரலாற்றில் காலம் தோறும் ஏன் இந்தியா இலங்கை கலப்பு சிங்கள அரசியல் ஆளர்களுக்கே சார்பாக இருந்தார்கள் ,இருக்கின்றார்கள் .என்பதையும்,நாம் நடந்து வந்த பாதையில் நிதர்சனமாக அறிகின்றோம் ,,,விஜயன் என்ற ஆப்கானிஸ்தான் இளவரசன் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் அவன் தனது பூர்வீக நாட்டோடு உறவுகளை பேணியதாக மகாவம்சமும் குறிப்புகள் சொல்லவில்லை வேறு எந்த வரலாறுகளும் தெளிவுபடுத்தவில்லை. அவன் ஆண்டதாக சொல்லப்படும் அரசு வீழ்சி காணாமல் உண்மையில் இருந்து இருந்தால் அதற்கான அரசன் உடனடியாகவே வந்திருக்க வேண்டும் ஏன் வரவில்லை .
உபத்தீசன் என்ற நாகர்குலஅரசன் எவ்வாறு விஜயன் இறந்த பின் 30 வருடங்களுக்கு மேலாக ஆண்டான் . விஜயன் வம்சமே இல்லாமல் பரிதாபமாக மாண்டதை ஏற்றுகொள்ள விரும்பாத அதேவேளை உண்மை வரலாறுகளை மறைத்தும் இருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.உபத்தீசன் ஆண்ட 30 வருடங்களும் தொடர்சியாக விஜயனுடன் உறவுமுறையில் பரவலாக கலந்த பாண்டியர்களின் உறவு அரசுகள் இந்தியாவில் இருந்து பலமுறை போர்தொடுத்தே உபத் தீச நகர் என்ற மாதோட்ட அரசை கைப்பற்றினார்கள் இவ்வாறு அந்த அரசை கைப்பற்றி வந்த பாண்டிய வம்சாவளி அரசனே பாண்டு வாசன்.- இவனது வம்சாவழியும் இவர்களுடன் உறவு முறையில் கலந்த விஜயனின் தோழர்களின் வம்சாவழியும் காலபோக்கில் இவர்களுடன் உறவுகள் ஆகிய பூர்வீக தமிழர்களின் ஒரு பகுதியினரும் சேர்ந்தவர்களே இன்றையசிங்களவர்கள். முதன் முதலில் இவர்களை சிங்களவர்கள் என்று இனம் பிரித்து பிற்காலத்தில் காட்டியவர்கள் வட இந்தியாவில் இருந்து பல்வேறு கட்டங்களாக வந்த பிக்குமார்கள் தான் என்பதையும் உறுதியாக கூறுகின்றேன் . இதை ஏற்றுகொள்ளும் பக்குவம் தமிழர்களாகிய எமக்கும் இல்லை உண்மை என்று உறுதியாகசொல்ல சிங்களவருக்கு மனமும் இல்லை . ஆனால் உண்மை என்றைக்கும் ஊமையும் இல்லை.
பாண்டிய பண்டு வாசனின் வருகைக்கு பின்னர்தான் தனித்துவமான பூர்வீக தமிழர்கள் முதன் முதலின் தங்கள் தனித்துவத்தை இழக்க தொடங்கினார்கள் . ஒரு சிறு பகுதியினர் பாண்டியர்களுடன் காலபோக்கில் கலப்பு திருமணங்களை மேற்கொண்டார்கள் .அந்த வேளையில் பிற்காலத்தில் பிக்குகளின் சூழ்சி வலை தங்கள் பூர்வீக இனத்தை பாதிக்கும் என்று அவர்கள் உணர்ந்து இருக்கவில்லை. பாண்டியர்களையும் முழுமையாக நம்பினார்கள். அவர்களும் தங்களுடைய கலாசார ஒழுங்கில் இருந்ததால் ஒன்றிணைந்தார்கள் . எம்மில் பெரும்பாலானவர்கள் இன்றும் பாண்டியர்கள் தமிழர்கள் என்று முழுமையாக நம்பிக்கொண்டு தான் இருக்கின்றார்கள் ,அவர்கள் பாண்டிய அரசர்கள் சிங்கள மன்னர்களுடன் கொண்டு இருந்த உறவை வரலாற்றில் எந்த சந்தர்பத்திலாவது ஈழத்து தனித்துவமான தமிழ் மன்னர்களுடன் கொண்டு இருந்தார்களா ?என்று ஒருகணம் சிந்தித்து பார்க்கவேண்டும் .சோழர்களுடன் பிற்காலத்தில் போரில் தோற்று தப்பி ஓடிவந்த வீர பாண்டியன் தனது குல வாளையும் அரச கிரீடத்தையும் சிங்கள அரசர்களிடம் கொடுத்தே மறைத்து வைத்தான் என்பதை பல வரலாறுகள் எடுத்து காட்டுகின்றது அதுவே சோழர்கள் சிங்கள அரசர்களுடன் பகைமை கொள்ள முக்கிய காரணமானது .சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் கூட ஈழத்தின் மீது படை எடுத்த வேளைகளில் ஈழத்து தமிழர்களையும் எதிரியாகத்தான் பார்த்தார்கள் .அதை தான் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்திய அமைதி படை என்ற அநியாய படையும் செய்தது எனவே இந்தியா இன்று மட்டுமல்ல வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே ஈழத் தமிழர்களை உண்மையில் எதிரியாகவே நினைத்து வந்துள்ளார்கள் .உலகின் முதலாவது பூர்வீக மக்களை அழிக்கும் உலக நிகழ்சி நிரலில் இந்தியா முன்னெடுக்கும் நடவடிக்கை .இது என்றுமே மாற போவதில்லை ,இதை நாம் உணரபோவதும் இல்லை .
தொப்புள் கொடி உறவென்று நாம் தென்னிந்தியர்களை அழைக்கின்றோம் எமக்கும் அவர்களுக்கும் முதலாவது குமரிக்கண்ட கடல் அழிவின் போது தொப்புள் கொடி அறுக்க பட்டது இந்த இயற்கை அழிவு சாதாரணமானது .ஆனால் அதன் பின்னர் அவர்கள் எங்களுக்கு சதா ரணம் செய்து இருக்கின்றார்கள் உதாரணமாக சூரனுடனான போர் ,இராவணன் உடனான போர் நாக அரசர்குடனான போர்கள் தொடக்கம் இன்றுவரை அது தொடர்கதையாகவே உள்ளது இதை உணராமல் ஒட்டி உறவாடி கொண்டு இருப்பது நாம் மட்டுமே அவர்கள் எட்டி உதைத்து கொண்டு தான் இருக்கின்றார்கள் .வரலாறு போகும் பாதையில் சில புரிதல்களுக்காக ஈழ வம்ச வரலாற்றில் இவற்றை நான் மேற்கோள் காட்ட வேண்டி ஏற்படுவிட்டது .தமிழர்களின் தனித்துவத்தை சிதைத்து தாயகத்தை அபகரித்து சிங்களவர்களை உருவாக்கி அவர்களை ஆட்சியாளர்கள் ஆக்கியது இந்தியா .இதற்காக கட்டிய கதைகள் ஏராளம். எழுதிய புராண இதிகாசம் பல நூறு அத்தோடு நிறுத்தினார்களா என்றால் அதுவும் இல்லை ஈழத்தின் அசைக்க முடியாத சாம்ராஜ்யாமான கதிரை மலை என்ற கந்த ரோடையில் பிற்காலத்தில் அகழ்தெடுத்த தொல்பொருள் ஆதாரங்களை சிந்து வெளி மொகன்ஷதொரோ ஹரப்பா கொண்டு சென்று புதைத்து எடுத்து உயரிய நாகரீகத்துக்கும் உரிமை கொண்டாடினார்கள் .வெல்பவன் வாழ்வான் என்பது வேத சத்தியம் தான் ஆனால் இங்கு கொல்பவன் வாழ்வான் என்பது பலவழிகளில் நிரூபிக்க பட்டு உள்ளது ..முன்தோன்றிய மூத்த குடி ஈழத்தில் இன்று முப்பது இலடசத்துக்குள் முடங்கி ,குமரி கண்டத்தை ஆண்ட தமிழன் தனக்கென்று ஒரு நாடு இல்லாமல் இழந்த தம் ஈழத்தையும் தனித்துவத்தையும் மீண்டும் பெறுவதற்காய் அறுநூறு கோடி மக்கள் வாழும் உலக வல்லாதிக்க அரசுகளோடு போராடி கொண்டு இருக்கின்றார்கள் ,,,
வளரும் தொடரில் குமரிக்கண்டத்தை ஆண்ட ஈழ தமிழர்கள் எவ்வாறு வந்தேறு குடிகளின் ஆளுகைக்கு உட்பட்டார்கள் என்பதை நிகழ்வுகளில் பாதையில் பயணித்து பார்ப்போம்
**பாண்டியர்களும் தமிழர்களும் என்றால் பாண்டியர்கள் யார்?? எந்த மொழிக்குரியோர்??
9 ,,,ஆரம்பத்தில் அன்னியர்கள் ஈழத்துக்கு ஏன் வந்தார்கள் ?
உலகில் முதல் முதலில் சிறந்த நாகரீகத்தோடு ,சிறந்த கட்டமைப்போடு நாணயத்தையும் வெளியிட்டு வணிக பரிவர்த்தனையில் ஈடுபடுத்திய ஒரு தேசத்தில் யாருக்கு தான் ஆசை இருக்காது ,,மற்றவர்களை சுரண்டி வாழும் பழக்கத்தை ஐரோப்பியரும் அமெரிக்கர்களும் முதன் முதலில் புராதன பாண்டியர்களை பார்த்துதான் கற்று கொண்டார்கள் .சோழர்களும் பாண்டியர்களை பார்த்து ஆரம்பத்தில் இந்த வழியிலேயே செயல்பட்டார்கள் ,இந்த கருத்துக்கள் வாசகர்களுக்கு கசப்பான விடயங்களாய் இருந்தாலும் என்னால் சுயநலம் சார்ந்து சுயசிந்தனையை மாற்றி எழுத முடியாது ,அந்தவகையில் ஈழத்துக்கு வந்தேறு குடிகளாக வந்தவர்கள் ஈழத்தின் பெறுமதி வாய்ந்த சொத்துக்களை சூறை ஆடி தங்கள் தாய் நிலங்களுக்கு கொண்டு சென்றார்கள் .இதற்காகவே பல்வேறு போரிலும் ஈடுபட்டார்கள் ,இந்த விடயங்களை எமது மூதாதைகள் பண்டிதர்கள் அறிவியல் ஆய்வாளர்கள் வரலாற்று ஆசிரியர்கள் ஏன் வெளிப்படையாக எழுதவில்லை என்பது என்மனதில் முள்ளாக குற்றி கொண்டே இருக்கின்றது அதற்கான காரணங்களை ஆராய்ந்தால் .வரும் சில குறிப்புக்கள், அவர்களும் தமிழர்கள் என்பதால் மறைத்தோம் என்ற பொருள் சில இடங்களில் உணரப்படுகின்றது …
ஆரம்பத்தில் இன்றைய ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த விஜயன் குவேனியினதும் உறவினர்களினதும் சொத்துக்களை சூறை ஆடி பாண்டிய மன்னனுக்கு முத்துக்கள் நவரத்தினங்கள் தங்க ஆபரணங்கள் யானை தந்தங்கள் என்பவற்றை பரிசாக கொடுத்து அனுப்பி பாண்டிய பெண்களை தங்களுக்கு திருமணம் செய்து தருமாறு செய்கின்றான் இதையும் தமிழ் அறிஞர்கள் வெளிப்படையாக கூறவில்லை ,சிங்கள மகாவம்ச தேரர் திருட்டை ஒரு பொருட்டாக நினைக்காததால் சொல்லி விட்டார் என்று நினைக்கின்றேன் .பின்னர் ஒவ்வொரு முறையும் விஜயன் பாண்டியர்களிடம் படை உதவி கேட்ட போதும் ஈழத்து செல்வம் பல்வேறு கட்டங்களில் பாண்டி நாடு சென்றது .பாண்டியர்களுக்கு அந்தவேளையில் தான் நிதர்சனமாக புரிந்தது ஈழத்தில் செல்வம் அதிகம் இருப்பது அதனால் தான் தொடர்சியாக படை எடுத்து தோல்வி கண்ட பாண்டியர்கள் ,விஜயன் இறந்து முப்பது வருடங்களின் பின்னர் மாதோட்டத்தின் உபத்தீச நகரை கைப்பற்றினார்கள் .கைப்பற்றி வந்த முதல் பாண்டிய அரசனே பண்டு வாசன் ,,
கடல் கடந்து வந்து நாட்டை மாதோட்ட அரசை கைப்பற்றிய பண்டு வாசன் மாதோட்டத்தில் இருந்த பொருள்களை சூறை ஆடி பாண்டி நாட்டுக்கு அனுப்பி வைத்தான் .மேலும் பெரும் தொகையில் செல்வத்தை சேர்க்க வேண்டுமானால் இங்குள்ள ஏனைய பகுதி சிற்றரசர்களுடன் போராடி வென்று அவர்கள் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் .தனது பலம் பலவீனத்தை நன்கு உணர்ந்தவன் .ஈழத்தின் நாகர்களின் மிக பெரிய இராச்சியமாக இருந்த வட பகுதி கதிரை மலை அதாவது கந்தரோடை அரசுடன் போரிட விரும்பவில்லை ,. அவர்களுடனான உறவுகளையும் முற்றாக தவிர்த்தான் .வஞ்சகமாக நல்லுறவுகளை புரிந்தால் தென் பகுதி அரசர்களை ஏமாற்றலாம் என்று நினைத்து பல்வேறு திருமண பந்தங்களை குறு நில அரசர்களிடையே ஏற்படுத்தினான் .அந்த வேளையில் விஜயனின் தோழனின் மகன் திக்காமினி . அனுராத புரத்தில் இவனது தாய்வழி இயக்கர் குலத்து சிறு அரசை ஆண்டு வந்தான்.இவன் பாண்டியர்கள் மாதோட்டத்தில் வந்து இறங்குவதற்கு பல்வேறு உதவிகள் செய்ததாலும் அவர்களோடு மிகவும் தோழமையோடு இருந்ததாலும் ,பண்டு வாசன் தன் மகள் உன் மாத சித்தரையை இவனுக்கு திருமணம் செய்து வைத்தான் .இவர்களுக்கு பிறந்த மகனே பண்டு காபயன் இவனே அனுராத புர இரசியத்தை உருவாக்கியதாக புனை கதை மகாவம்சம் சொல்கின்றது .உண்மையில் காடுகளை அழித்து அனுராத புரத்தை சிறுய அரசாக உருவாக்கியவர்கள் விஜயனால் பாதிக்க பட்ட இயக்கர் குல .குறுநில அரசர்கள் .
உறவுகளாய் இருந்தாலும் நாம் பக்கத்து வீட்டு காரனை பார்த்து பொறாமை படுவதை !பக்கத்து நாட்டுக்காரன் வந்து எம்மை பார்த்து பொறாமை பட்டு எம்மோடு சண்டை பிடித்ததில் இருந்தே நாம் கற்று கொண்டோம் .இதுவே காலப்போக்கில் வந்தேறு குடிகளோடு ஒரே நாட்டில் சேர்ந்து வாழமுடியாமல் ஒரு வேற்று இனத்தை தோற்றுவித்தது .
அனுராத புரத்தில் இருந்து பாண்டியர்கள் யானைகளை பிடித்து இந்தியாவுக்கு அனுப்பியதை விரும்பாத பண்டுகாபயன் மாமா மாருடன் போரிட்டு வென்று மாமன் அபயன் ஆண்ட உபத்திஸ்ஸ நகரையும் அனுராத புரத்தோடு இணைத்து கொண்டான் .அன்றில் இருந்து பாண்டியர்கள் சொத்துக்களை செல்வங்களை திருடி கொண்டு செல்வதை எதிர்த்து முடியுமானவரை தடை செய்தான் .இதனால் இவர்களுக்கு இடையில் பிரிவுகள் சண்டைகள் பெருமளவில் ஏற்பட்டது .பண்டு காபயனின் தந்தையின் தாய்வழி இயக்கர்குல குறு நில அரசர்கள் இவனுக்கு பலவழிகளில் உதவினார்கள் .இதை சாதகமாய் பயன்படுத்திய பண்டுகாபயன் தனது வம்சத்தினரே முழு நாட்டையும் ஆழ வேண்டும் என்ற கொள்கையில் செயல்பட தொடங்கினான் .பாண்டியர்கள் சொத்தை திருட வந்த இடத்தில் அவர்களோடு உறவாகிய இவன் நாட்டை திருட முயற்சிக்கின்றான் இது தான் இவர்களுக்குள் உள்ள வித்தியாசம் ..
பூர்வீக தமிழனின் நாட்டை கைப்பற்ற பலம் உள்ளவன் காலில் விழுந்தாலே முடியும் என்பதை பண்டு காபயன் நன்றாக உணர்ந்தான்.பாண்டியர்கள் தன் உறவினர்களாக இருந்தாலும் அவர்கள் ஈழத்தின் சொத்துக்களை சூறை ஆடுவதே முக்கியமாக கருதுவதால் அவர்களின் படை உதவியை முழுமையாக நம்பாமல் மிகவும் சாதுரியமான முறையில் பூர்வீக தமிழர்களிடம் இருந்து நாட்டை அபகரிப்பதற்கு அந்தகாலத்தில் வட இந்தியாவில் பேரரசாக இருந்த மௌரிய பேரரசன் சந்திர குப்தனின் உதவியை நாடினான் .இதையே இன்றைய சிங்கள அரசும் இந்தியாவின் உதவியை மட்டும் நம்பி தமிழர்களுடன் போரிடாமல் சீனா ஈரான் மற்றும் மேற்குலக நாடுகளின் உதவியை பெற்று கொண்டது .இந்தியாவின் உதவியையே வெளி உலகிற்கு தெரியப்படுத்தியது .மற்ற நாடுகளின் உதவிகளை மறைத்தது ..அதுபோலவே சந்திர குப்தனின் படை உதவி பெற்று சில குறுநிலஅரசர்களை வென்று பாண்டுகாபயன் தனது இராச்சியத்தை விரிவாக்கியதையும் இடையில் சமணம் பண்டுகாபயனால் ஈழத்தில் பரவியதையும் அனைவரும் மறைத்தார்கள்
சமணம்! ஈழத்தில் பண்டுகாபயன் அனுராத புர இராச்சியத்தோடு இணைந்த சில குறு நில அரசுகளை கைப்பற்ற உதவிய சத்திர குப்தனின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அவர் துறவி ஆகிய சமண சமயத்தை தானும் தழுவி மக்களையும் அந்த சமயத்தை கடைப்பிடிக்குமாறு பணித்தான் ,500 சமண சமய துறவிகளுக்கு அனுராத புரத்தில் இருப்பிடங்கள் அமைத்து கொடுத்து உதவி செய்தான் ,சோதியன் ,கிரி ,கும்பண்டன், என்பவர்கள் இந்த துறவிகளில் முதன்மையானவர்கள் .இவர்களில் கிரி என்பவரும் அவரது சீடர்களும் தங்குவதற்காக பண்டு கா அபயனால் கட்டப்பட்டதே அபயகிரி துறவிகள் மடம்.இந்த மடம் கட்டப்பட்ட இடத்துக்கு அருகில் மிக பெரிய சிவன் கோவில் இருந்ததாகவும் வரலாறு சொல்கின்றது மக்களை சமண சமயத்தை கடைப்பிடிக்க வற்புறுத்தி அந்த சிவன் கோவிலை இடித்ததாகவும் வரலாறுகள் உண்டு .இதனை சிங்கள எழுத்தாளர்கள் கூட உறுதி படுத்தி உள்ளார்கள் .ஆனால் தமிழ் எழுத்தாளர்களும் சமணம் ஈழத்தில் நிலவியது என்பதை மறைக்க பரசமயிகளுக்கு பண்டு காபயன் இருப்பிடங்கள் கொடுத்து உதவினான் என்பதற்கு அராபியாவில் இருந்து வந்த முஸ்லீம்களுக்கு உதவினான் என்று வரலாற்றை மாற்றி எழுதினார்கள் முஸ்லீம்கள் ஆரம்பத்தில் குதிரைகளை ஈழத்தில் உள்ள அரசர்களுக்கு விற்று யானைகளை தமது நாட்டுக்கு வாங்கி சென்றார்கள் . அரேபிய முஸ்லீம்கள் வணிகர்கள் வருகை விஜயன் காலத்துக்கு முன்னமே இருந்து இருக்கலாம் ஆனால் அவர்கள் அந்தவேளையில் ஈழத்தில் இருப்பதற்கு தங்கிவிடவில்லை .
ஈழத்தில் பண்டுகாபயனால் போற்றப்பட்டு சமணசமயம். பிற்காலத்தில் பௌத்தத்தை மதம் என்று மௌரிய மன்னன் சந்திர குப்தனின் பேரன் அசோகனால் ஏற்றுகொண்ட வேளையில் மௌரிய தேசத்திலும் ஈழத்திலும் பௌத்தத்தின் தாக்கம் மக்களிடையே ஏற்பட்டதில் சமணம் அழிவு பாதையில் போனது .சமண மத துறவிகளின் மடமாய் இருந்த அபயகிரி துறவிகள் மடமும் புத்த துறவிகள் மடமானது .புத்த பிக்குகள் தங்கும் மடத்தோடு சேர்த்து பிற்காலத்தில் அரசர்களின் உதவியோடு அபயகிரி விகாரையையும் கட்டுவித்து கொண்டார்கள் ,,
எனவே அன்னியர்கள் ஆரம்பத்திலும் சரி பிற்காலத்திலும் சரி ஈழத்துக்கு செல்வங்களை சூறை ஆடவும் மதங்களை பரப்பவுமே வந்தார்கள் என்பது நிரூபணமாகின்றது .அவ்வாறு வந்தவர்களே நாட்டையும் முழுமையாக திருடி ஆளுகைக்குள் கொண்டுவந்து விட்டார்கள் என்பதையும் மனவருத்தத்துடன் தெருவிக்கின்றேன்
பண்டுகாபயன் அனுராத புரத்தை ஆண்டகாலப்பகுதியில் கதிரை மலை என்ற கந்தரோடை இராச்சியத்தை நாக வாணன் என்ற பூர்வீக தமிழ் மன்னன் ஆண்டு வந்தான் பலம் பொருந்திய நாக அரசர்கள் தங்களது சுயபராக்கிரமங்களை கொண்டே வம்சம்தோறும் ஆண்டுவந்தார்கள் .எந்த ஒரு அந்நிய சக்திகளிடமும் அவர்கள் அடிபணியவும் இல்லை உதவி பெறவும் இல்லை. பண்டுகாபயனும் இயக்கர்குலத்தின் உறவு முறையில் இருந்ததினால் ஆரம்பத்தில் அவனை அவர்கள் எதிர்கவில்லை காலப்போக்கில் பாண்டியரின் வருகை கலப்பு சூழ்சிகள் மௌரிய படையினரின் வருகை சமண சமயத்தின் வருகை என்பன இவர்களுக்கு இடையே விரிசல்களை தோற்றுவித்தது பண்டு காபயனின் விசித்திரமான போக்கு இவர்களால் ஏற்று கொள்ளமுடியாமல் இருந்தது இதனால் பண்டுகாபயனோடு முரண்பட்டு நாக வாணன் அனுராத புரத்தின் மீது படை எடுத்து அரசை கைபற்றி தமது அரசோடு இணைத்து கதிரைமலையை தலைநகராய் கொண்டு நாக அரசர்கள் ஈழத்தின் பெரும்பகுதியை ஆண்டார்கள் …இதனை மகாவம்சம் இடையில் பதினேழு வருடம் அரசு இல்லாமல் இருந்தது என்று மட்டும் சொல்கின்றது ஏன் என்றால் அந்த பதினேழு வரிடமும் அனுராத புரத்தையும்ஆண்டது தமிழன் என்று சொல்ல தேரருக்கு விருப்பம் இல்லை ..இருந்தாலும் தேவனை நம்பிய தீசன் என்பவனால் மீண்டும் அனுராத புர தமிழ் அரசு நிலைமாறியது பற்றியும் ,புனிதமான பௌத்தத்தை மதமாக்கி மனித மனங்களை ரணமாக்கியது பற்றியும் வளரும் தொடரில் தொடரும் நிகழ்வுகளின் வரிசையில் பார்ப்போம்