ஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து எதிர்கால அரசியல் செயற்பாடு குறித்து திட்டமிட்டுள்ளனர்.

318

 

ஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள   ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து

எதிர்கால அரசியல் செயற்பாடு குறித்து திட்டமிட்டுள்ளனர்.

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள ஈரோஸ் அமைப்பின் இணைப்பு காரியாலையத்தில் இன்று (12.11.2016) இவ் ஒன்றுகூடல் இடம்பெற்றது.
நுவரெலியா,  கண்டி,  அம்பாறை,  மட்டக்களப்பு,  திருகோணமலை,  வவுனியா மன்னார்,  முல்லைதீவு,  மற்றும் யாழ்பாணத்தை  சேர்ந்த முன்னாள் ஈரோஸ் போராளிகள் இவ் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
ஈரோஸ் அமைப்பை மீண்டும் அரசியல் ரீதியாக மீள் கட்டுமானம் செய்வது தொடர்பாகவும் விடுதலை போராட்டத்திற்காக  இன்னுயிர்களை அர்பணித்த போராளிகளை நினைவுகூர்வது தொடர்பாவும் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் விரிவாக ஆராயபட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் அவர்களின் வழிகாட்லில் இருந்த நூற்றுக்கும் அதிகமான  போராளிகள் கலந்து கொண்டிருந்தனர்.
 UNMAINEWS.COM
SHARE