பொருளாதார நெருக்கடி காரணமாகவே ஜனாதிபதித் தேர்தல் முன்கூட்டியே நட த்தப்பட்டதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

261

 

அதிகரித்த பொருளாதார நெருக்கடி காரணமாகவே ஜனாதிபதித் தேர்தல் முன்கூட்டியே நட த்தப்பட்டதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ranil

அவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டு மக்களுக்கு இதனை விட சிறந்த வாழ்க்கை கொடுக்க வேண்டும். வார்த்தைகளில், போராட்ட கோஷங்களில் அதனை செய்ய முடியாது. அதற்கு பணம் அவசியம். கவர்ச்சிகர மான பொருளாதார பின்னணியை நாம் உருவாக்க வேண்டும்.

நாம் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை தேட வேண்டும். தற்போதைய தேிய அரசாங்க த்திற்கு பின்னர் நாடு மாற்றமடையும்

சாதாரண குடும்பத்தை வலுப்படுத்தும், வாழ்க்கை போராட்டத்தை வெல்லக் கூடிய வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்.நாட்டுமக்கள் தற்போது இருக்கும் வாழ்க்கையை விட சிறந்த வாழ்க்கையை ஏற்படு த்திக்கொடுக்க வேண்டும். அதற்காக கவர்ச்சிகரமான பொருளாதார பின்னணியை உருவாக்க வேண்டும்.

சாதாரண குடும்பத்தை வலுப்படுத்தும் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தமைக்காக நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இது வரலாற்று சிறப்புமிக்க வரவு செலவுத் திட்டம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்களை உள்வாங்கி தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம்.இரண்டு கட்சிகள் இணைந்து இதனை செய்ய முடிந்தமை சிறந்த முன்னேற்றம். இந்த முன்னேற்றம் நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்தது.

கடந்த தசாப்தத்தில் நாட்டின் கடன் சுமையானது மூன்று மடங்காக அதிகரித்தது. 2014 ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 391 பில்லியன். இதுதான் எமது பிரச்சி்னை.5 ஆயிரத்து 169 பில்லியன் ரூபாக கடன் சுமை அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி வேகம் 6 வீதமாக இருக்கும் போது செலவுகள் அதிகரிக்கும், கடனும் அதிகரிக்கும்.

கடன் அதிகரித்த காரணத்தினால், தேசிய வருமானம் 13 வீதமாக குறைந்தது. எமது ஏற்றுமதி வருமானம் குறைய ஆரம்பித்தது. பாரம்பரிய பயிர்களின் விலைகள் குறைந்து ள்ளன. ஜீ.எஸ்.பி. பிளஸ் இல்லாமல் போனது எமக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இது நாம் ஏற்படுத்தி க்கொண்ட பிரச்சினை.

அரசின் வருமானம் செலவுகளை ஈடு செய்ய போதாமல் போன

SHARE