மட்டு மாவட்டத்தில் மீளக் குடியேறிய மக்களுக்காக 2017ஆம் ஆண்டில் 1000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன- மட்டு மாவட்ட அரசாங்க அதிபர்

292

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப் பகுதிகளிலுள்ள மக்களின் வீட்டுத்தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் 2017ஆம் ஆண்டில் 1000 வீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மீள் குடியேற்ற அமைச்சின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி. பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார்
unnamed
எதிர்வரும் வருடத்தில் மீள்குடியேற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
அதன்படி தெரிவுகள் நிறைவு செய்யப்பட்டு ஏறாவூர்;பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கொடுவாமடு, பன்குடாவெளி, ஆகிய கிராமங்களில் தலா 50 வீடுகளும், ஏறாவூர்; -04, ஏறாவூர்; -05  ஆகிய கிராமங்கில் தலா 20 வீடுகளும், பெரிய புல்லுமலை ,கிராமத்திற்கு 10 வீடுகளுமாக 150 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மண்முனை மேற்கு  பிரதேச செயலாளர் பிரிவில் மகிழவெட்டுவான் -80 வீடுகள், ஆயித்தியமலை வடக்கு -30 வீடுகள், ஈச்சந்தீவு -40 வீடுகளுமாக, 150 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கிரான் கிழக்கு 40 வீடுகள், பூலாங்காடு 30 வீடுகள், பாலையடித்தோணா 25 வீடுகள், தேவபுரம் 25 வீடுகள், கோரகில்லிமடு 30 வீடுகளுமாக 150வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மண்முனை தென்மேற்கு  பிரதேச செயலாளர் பிரிவில் முதளைக்குடா , கொக்கட்டிச்சோலை தெற்கு, குழுவின்மடு ஆகிய கிராமங்களுக்கு தலா 30 வீடுகளும், பட்டிப்பளைக்கு 20 வீடுகள்,  மகிழடித்தீவு தெற்கு  கிராமத்திற்கு 40 வீடுகளுமாக 150 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
போரதீவுப்பற்று  பிரதேச செயலாளர் பிரிவில் காக்காச்சிவெட்டை 87 வீடுகள் ,திக்கோடை 75 வீடுகள், நெல்லிக்காடு 54 வீடுகள் , ஆனைகட்டிய வெளி 33 வீடுகள் , பலாச்சோலை  51 வீடுகளுமாக 300 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கதிரவெளி 45 வீடுகள், புனானை கிழக்கு, பால்சேனை கிராமங்களுக்குத் தலா 20 வீடுகள், புச்சாக்கேணி 10 வீடுகள், கிரிமிச்சை கிராமத்திற்கு 5வீடுகளும் என 100 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகளுக்கான பயனாளிகளுக்கான தெரிவு தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான வேலைகள் எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார்.
மேலும் மாவட்டத்திலுள்ள வீட்டுத் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் வீடுகள் வழங்குமாறு அரசாங்க அதிபர் திருமதி பி;.எஸ்.எம்.சார்ள்ஸ் இந்திய உதவித் தூதுவரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, கடந்த கால இந்திய வீட்டுத்திட்டத்தை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அரசாங்க அதிபர் இந்திய உதவித் தூதுவரிடம் விடுத்த வேண்டுகோளிற்கமைய மேலும் 320 வீடுகள் 2017ஆம் ஆண்டில் வழங்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.
இவ் வீடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர் மீள்குடியேற்றப் பகுதி மக்களுக்காக முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப் பிரதேங்களின் அபிவிருத்திகளுக்கென தயாரிக்கப்பட்டுள்ள 3 ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாய் அமையும் இந்த 1000 வீடுகள் திட்டத்தின் மூலம் மேலும் ஒரு பகுதி மீள்குடியேறிய மக்களுக்கு வீடு;கள் வழங்கப்படுவதன் மூலம் வீட்டுப்பிரச்சினை தீர்க்கப்படுவதுடன் மீள்குடியேறிய மக்களின் வாழ்கைத்தரமும் மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
SHARE