இதை செய்தால் டிரம்புக்கு கட்டாயம் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும்?

272

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இருக்கும் காஷ்மீர் பிரச்சனையை தீர்த்து வைத்தால் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என பாகிஸ்தானின் வெளிவிவகாரத்துறை ஆலோசகரான சர்தாஜ் அஜீஸ் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவு விவாகாரங்களின் ஆலோசகரான சர்தாஜ் அஜீஸ் வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஹார்ட் ஆப் ஏசியா கான்ப்ரன்ஸ் என்ற மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையே உள்ள பதற்றத்தை குறைப்பதற்கு இது ஒரு வாய்ப்பு என்றும் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் காஷ்மீர் விவகாரம் குறித்து இரு நாடுகளையும் ஒன்றாக செயல் பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் டிரம்ப் இதை செய்யும் பட்சத்தில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

SHARE