உலகின் சிறந்த தாயாக பிரபல்யமடைந்துள்ள கரு ஜயசூரியவின் மகள்!

247

உயிரிழந்த நிலையில் உலகளாவிய ரீதியில் சிறந்த தாயாக, இலங்கை சபாநாயகர் கருஜயசூரியவின் மகள் மாறியுள்ளார்.

பிறக்காத குழந்தைக்காக தனது உயிரை தியாகம் செய்த கருஜயசூரியவின் மகள் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வருகின்றன.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இந்திர ஜயசூரிய கடந்த மாதம் உயிரிழந்தார். அவர் லண்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த வேளையில் உயிரிழந்திருந்தார்.

இது குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் ஊடக உலக மக்களின் அவதானம் அவர் மீது பதிந்திருந்தது.

அவர் கர்ப்பமாக இருந்த காலப்பகுதியில் மேற்கொண்ட தீர்மானம் குறித்து சர்வதேச ஊடகமான டெய்லிமெயில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை இந்திராவின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்பட தொகுப்பினை காணொளியாக டெய்லிமெயிலின் பிரதான பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த காணொளியில் என்னவொரு துணிச்சல், துணிச்சலான தாய் (What a brave, brave mother) என தலைப்பிடப்பட்டிருந்தது.

றித்த காணொளி வெளியிட்ட 6 மணித்தியாலங்களில் நான்கு இலட்சத்து 20 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். உலகின் சிறந்த தாயார் என அதிகளவானோர் பதிவிட்டுள்ளனர்.

 

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90-5 625-0-560-320-160-600-053-800-668-160-90

SHARE