புதிய அரசியல் அமைப்பின் ஊடாக காணி காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படும்-ஜயம்பதி விக்ரமரட்ன

240

8541

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இது தொடர்பிலான பரிந்துரைகள் அரசியலமைப்பு உபகுழுவினால் பிரதமரிடம் வழங்கப்பட உள்ளது. இந்த யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட்டு அரசியல் அமைப்பில் இணைத்துக் கொள்ளப்படும்.

புதிய அரசியல் அமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் 13ம் திருத்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

தென் ஆபிரிக்க அரசியல் அமைப்பிற்கு நிகரான வகையில் புதிய அரசியல் அமைப்பு அமையும்.

ஐக்கிய நாட்டுக்குள் ஐக்கிய மாகாணங்களில் அரச நிர்வாகம் செய்வதனால் மக்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்க முடியும்.

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள் இந்த திட்டத்தை எதிர்ப்பார்கள்.

இராணுவ சூழ்ச்சி மூலம் நாட்டை கைப்பற்ற முடியும் என சில தரப்பினர் போலிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

SHARE