மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட உதவிப் பொலிஸ்மா அதிபருக்கு உடனடியாக நடவடிக்கையெடுக்கமாறு நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றுக்கு கிடைக்கப்பெற்ற எழுத்துமூல முறைப்பாட்டையடுத்து நேற்று (22) இந்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மாலை நேர வகுப்புக்களுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை பாதிக்கும் வகையில் அநாவசிய நடவடிக்கையில் ஈடுபடுவர்களை கைது செய்து நீதிமன்றுக்கு ஆஜார்ப்படுத்துமாறு நீதவான் மா.கணேசராஜா பொலிசாருக்கு இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஞாயிறு தினம், பூரணை மற்றும் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளை என பல்வேறுபட்ட விசேட தினங்களில் தனியார் கல்வி நிலையங்கள் வகுப்புக்களை நடத்தக்கூடாது என பல்வேறுபட்ட தரப்பினராலும் கூறப்பட்டபோதும் எவ்வித முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்கள் முன்னெடுக்கவில்லை என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு பல்வேறுபட்ட சிறுவர் துஸ்பிரயோகங்கள் தனியார் கல்வி நிலையங்கள் மூலம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.