95 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சென்றுள்ளன

246

warships

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு துறைமுகத்துக்கு 95 போர்க்கப்பல்கள் வந்துசென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்திய- ஆசிய –பசுபிக் பிராந்தியத்தின் முக்கிய தளம் என்ற அடிப்படையிலேயே கொழும்புக்கு இந்த கப்பல்கள் வந்துசென்றுள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர சி.விஜேயகுணரட்ன தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடல்சார் மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்கும்போதே தளபதி இதனை வெளியிட்டுள்ளார்.

திருகோணமலையில் உரிய வசதிகள் இன்மைக்காரணமாக அங்கு 6 கப்பல்கள் மாத்திரம் விஜயம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதும் கூட அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ் சமர்செட் (LPD-25) இலங்கையின் கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச கடல்சார் மாநாடு காலியில் எதிர்வரும் 28ஆம் திகதியும், எதிர்வரும் 29ஆம் திகதிகளில் கொழும்பிலும் நடைபெறவுள்ளது.

முதன்முறையாக நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் போது இந்தியா, ஜேர்மனி மற்றும் நெதாலாந்தின் கடற்படை தளபதிகளும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE