ஜேர்மனியில் அடுத்தாண்டு நடைபெறும் சான்சலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட உள்ளதாக தற்போதைய சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியை பொறுத்தவரையில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் சான்சலர் பதவி வகிக்கலாம்.
அந்த வகையில் கடந்த 2005ம் ஆண்டு முதல் சான்சலராக பதவி வகித்து வரும் ஏஞ்சலா மெர்க்கல், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலிலும் போட்டியிட உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜேர்மனியின் ஜனநாயகப் பண்புகளை போற்றவும், பாரம்பரியத்தை பாதுகாக்கவும் நான் மீண்டும் போட்டியிட விரும்புகிறேன்.
நான் இதுவரை சந்தித்த தேர்தல்களிலேயே இதுதான் மிக கடுமையானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.