இருவரும் சந்தித்து கொண்ட அந்த தருணம்..தலை ஒட்டி பிறந்த குழந்தைகள் நெகிழ்ச்சி

295

27 மணிநேர ஆப்ரேஷனுக்கு பின்னர் தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்ட தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் ஒருவர் முகத்தை ஒருவர் முதல் முறையாக பார்த்து கொண்ட அழகான சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க்கை சேர்ந்த தம்பதி கிறிஸ்டியன் மேக்டொனால்டு- நிகோல், இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி தலை ஒட்டிய நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

இவர்களுக்கு ஜடோன், அணியாஸ் என பெயரிட்டனர். தலை ஒட்டி பிறந்த இரட்டையர்களை தனித்தனியாக பிரிக்க நியூயார்க்கை சேர்ந்த மண்டை ஓடு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச்சை மேக்டொனால்டு நிகோல் தம்பதி அணுகினர்.

பிறந்து ஓராண்டுக்கு பிறகு அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். அவரது அறிவுரையின் பேரில் கடந்த மாதம் ஆப்ரேஷனுக்காக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து இரட்டை குழந்தைகளை பிரிக்க மருத்துவ குழு 27 மணி நேர ஆப்ரேஷனை வெற்றிகரமாக நடத்தியதில் இருவரும் தனித் தனியாக பிரிக்கப்பட்டனர்.

அவர்கள் கடந்த மாதமே தனித்தனியாக பிரிக்கப்பட்டாலும், மருத்துவ கண்காணிப்பில் இருந்ததால் தற்போது தான் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள மருத்துவர்கள் அனுமதித்தார்கள்.

இதுகுறித்து இரட்டை குழந்தைகளின் தாய் நிகோல் கூறுகையில், இதை என்னால் நம்பவே முடியவில்லை.

என் இரு குழந்தைகளும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் என கூறியுள்ளார்.

SHARE