சிம்பு மனதில் பட்டதை ஓபனாக பேசிவிடுவார். ஆனால், அதனால் பிரச்சனை என்னமோ இவருக்கு தான். அப்படித்தான் சமீபத்தில் இவர் பதிவு செய்த டுவிட் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
ஓடாத படத்தையெல்லாம் வெற்றிப்படம் என்று சொன்னால், அச்சம் என்பது மடமையடா படத்தை என்ன சொல்வது? என்று கேட்டு இருந்தார்.
இதில் பலரும் ஜி.வியை தான் சொல்கிறார் என கூறிய நிலையில், ஜி.வி.பிரகாஷும், சிம்புவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள், கண்டிப்பாக அவர் இல்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
சில தினங்களுக்கு முன் கொடி படத்திற்கு இப்படித்தான் தனுஷ் விளம்பரம் செய்தார், அவரை தான் சிம்பு கூறியிருக்கிறார் என கூறுகின்றனர்.