விஜய் எப்போதும் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் பயணிப்பவர். இவர் தற்போது பைரவா படத்தின் டப்பிங் வேலைகளில் பிஸியாகவுள்ளார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அதேபோல் தற்போது பல வருடங்களுக்கு பிறகு பத்திரிக்கையாளர்கள் ஒரு சிலரை விஜய் நேரில் சந்தித்துள்ளார்.
இப்படி தொடர்ந்து விஜய் செய்யும் விஷயங்கள் ஆச்சரியத்தை தந்தாலும், ஏதோ திட்டம் வைத்திருக்கின்றார் என்பது மட்டும் தெரிகின்றது.