நாம் அன்றாடம் சாப்பிடும் இயற்கையான உணவுகள் நம்முடைய உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆனால் இன்றைய காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்து வருகிறது.
அலுவலக பணிகளில் மூழ்கி இருப்பவர்கள் அனைவருமே ஆரோக்கியமான உணவுகளை செய்து சாப்பிடுவதற்கு போதுமான நேரம் இல்லாததால், பாக்கெட் உணவுகள், ஜங்க் புட் எனும் நொறுக்குத் தீனிகள் போன்ற உடலுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் உணவுகளை அதிகமாக சாப்பிட்டு வருகின்றார்கள்.
இதனால் தங்களின் இளம் வயதிலேயே சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள் போன்ற பல்வேறு விதமான நோய்கள் மூலம் கஷ்டப்படுகின்ற சூழ்நிலைகள் ஏற்படுகிறது.
எனவே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் இருக்க அன்றாடம் உங்களுடைய உணவில் இதெல்லாம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கேரட்
அன்றாடம் நாம் சாப்பிடும் உணவில் கேரட்டை சேர்த்து வந்தால், சிறுநீர் பாதை தொற்றுகளை குணப்படுத்துகிறது. மேலும் கேரட்டில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நமது உடல்நலத்தை மேம்படுத்தப் பயன்படுகிறது.
தயிர்
தயிரானது, பாக்டீரியாக்கள் மற்றும் நச்சு கிருமிகளை எதிர்க்கும் தன்மைக் கொண்டது. எனவே இதை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதால், சிறுநீர் பாதையில் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது.
முள்ளங்கி
முள்ளங்கியானது, மண்ணில் விளையும் காய்கறிகளில், சிறந்த ஒரு உணவாக உள்ளது. எனவே முள்ளங்கியில் இருக்கும் ஆரோக்கியமான சத்துக்கள் சிறுநீர் பாதை தொற்றுக்களை தடுத்து, கிருமிகளை அழிக்கும் தன்மைக் கொண்டது.
தண்ணீர்
நாம் தினமும் அதிக நீர் குடிப்பதால், நோய்கள் தாக்குவதை தடுக்கிறது. மேலும் இந்த தண்ணீர் சிறுநீர் பாதை தொற்றுகளை தடுத்து அதை கட்டுப்படுத்துகிறது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு
சர்க்கரை வள்ளிக் கிழங்கில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே இந்த கிழங்கை நாம் தினமும் சாப்பிட்டு வருவதால், இது நமது உடலில் ஏற்படும் சிறுநீர் பாதை தோற்று நோயை எதிர்த்து போராடுகிறது.
இலவங்கப்பட்டை
இலவங்கப் பட்டை பண்டைய காலம் முதல் நாம் உணவில் சேர்த்து வரும் மருத்துவ குணம் கொண்ட ஒரு சிறந்த உணவுப் பொருளாக உள்ளது.
எனவே இது நம் உடம்பில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து, சிறுநீர் பாதை தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமிகளை முற்றிலும் அழிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.