எச்சரிக்கை! இடி மின்னல் தாக்கி 6 பேரின் நிலை பரிதாபகரம்!

278

ஹட்டன் – நோர்வுட் – கோதி தோட்டத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகிய ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த அனர்த்தம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவர்கள் தற்போது மஸ்கெலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் அவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை எனவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE