உலக மக்களை உறைய வைத்த நேரடி ஒளிபரப்பு காட்சிகள்

245

625-500-560-350-160-300-053-800-748-160-70-3

உலகில் நடக்கும் முக்கிய தகவல்களை மக்களிடம் உரிய நேரத்தில் கொண்டு போய் சேக்கும் சிறந்த பணியை செய்து வருவது தொலைக்காட்சிகள் தான்.

பொழுதுபோக்கு நிகழ்வுகள், , மக்களுக்கு தேவையான அறிவுள்ள தகவல்கள் என அனைத்தையும் வழங்கி அவர்களை தன் கைக்குள் வைத்திருக்கும் தொலைக்காட்சியின் சிறப்பு என்னவெனில் நேரடி ஒளிபரப்பு தான்.

உலகின் ஏதேனும் ஓரிடத்தில் நடக்கும் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான நேரடி காட்சிகள் மற்றும் சுனாமியின் கோரத்தாக்கங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.

இதில், சில நேரடி ஒளிபரப்புகள் என்றென்றும் நம் மனதை விட்டு நீங்காமல் இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பட்ட காட்சிகளை, இன்று ஒளிபரப்பினால் கூட ஆச்சரியத்துடன் அமர்ந்து பார்ப்போம்.

அப்படி, இதுவரை ஒளிபரப்பட்ட மிகவும் அதிர்ச்சியூட்டும் நேரடி ஒளிபரப்புகள் இதோ,

முனிச் படுகொலை

1972 ஆம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 11 ஓட்டப்பந்தய வீரர்கள் பாலஸ்தீன தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

பாலஸ்தீன தீவிரவாதிகள் மேற்கொண்ட இந்த தீவிரவாத தாக்குதல் அப்போது நேரடியாக ஒளிபரப்பட்டது. செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் நடைபெற்றதால் இது கறுப்பு செப்டம்பர் எனவும் அழைக்கப்படுகிறது.

ஜப்பான் சுனாமி

2011 ஆம் ஆண்டு ஜப்பானை தாக்கிய சுனாமி காட்சிகள் இன்றுவரை நம் கண்களை விட்டு மறையவில்லை. இந்த கோர சுனாமியின் தாக்கத்தால் 13,000 பேர் உயிரிழந்தனர்.

235 பில்லியன் மதிப்புகள் பொருட்கள் சேதமடைந்தன.

வெடித்து சிதறிய விண்கலம்

1986 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அமெரிக்காவால் அனுப்பப்பட்ட Challenger Space Shuttle வெடித்து சிதறியது. இந்த விண்கலத்தில் 9 வீரர்கள் இருந்துள்ளனர்.

பூமியில் இருந்து புறப்பட்ட சுமார் 73 செகண்ட்டுகளில் இந்த விண்கலம் வெடித்து சிதறியதில் இதில் பயணித்த 8 பேரும் உயிரிழந்தனர். இந்த காட்சியை உலக மக்கள் அனைவரும் நேரடியாக பார்த்தனர்.

தற்கொலை

புளோரிடாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், சேனல் 40 என்ற தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேரடி நிகழ்ச்சியின் போது தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அறிவித்தார்.

எனது தற்கொலைக்கு சாட்சியாக இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்று கூறிய இவர், திடீரென துப்பாக்கியை எடுத்து தனது காதுக்கு அருகில் சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டார்.

நிலவில் கால்பதித்த Apollo 11 Lunar Module

இது வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. அறிவியல் துறையில் மனிதன் அசுர வளர்ச்சியை அடைந்து வருகிறான் என்பதற்கு உதாரணம் தான் இந்த வீடியோ.

Apollo 11 Lunar Module என்ற விண்கலம் நிலாவில் கால்பதித்த நேரடி காட்சியை சுமார் 600 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

9/11 தாக்குதல்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள Twin towers கடந்த 2011 ஆம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது.

அந்நாட்டு மக்களை மட்டுமின்றி உலக மக்களையை அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த தாக்குதலில் 2,996 மக்கள் கொல்லப்பட்டனர். 6,000 பேர் காயமடைந்தனர்.

SHARE