இறந்த தாயை எழுப்ப முயற்சிக்கும் குட்டி யானை

273

அசாமில் பதஞ்சலி நிறுவனத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு தோண்டப்பட்டிருந்த குழிக்குள் யானை ஒன்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்காக உணவுப்பொருள் மற்றும் மூலிகை பூங்கா 150 ஏக்கர் பரப்பளவில், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது.

அப்போது அங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த சுமார் பத்தடி ஆழப் பள்ளத்துக்குள் அந்த பெண் யானை தவறி விழுந்தது. இதனால், கால் மற்றும் கழுத்து எலும்பு முறிந்த நிலையில் அந்த யானை வலியால் துடித்தது.

தன் தாய் படும் வேதனை பார்த்த குட்டி யானை பள்ளத்திற்குள் இறங்கி தனது தாய்க்கு உதவி செய்ய முயற்சித்தது. ஆனால், 30 நிமிட போராட்டத்திற்கு பிறது தாய் யானை உயிரிழந்துவிட்டது.

ஆனால், தனது தாய் இறந்துவிட்டது கூட தெரியாமல், அதனை முட்டி எழுப்ப குட்டி யானை முயற்சி செய்தது.

இதனைப்பார்த்த கட்டிடப்பணியாளர்கள் குட்டி யானையை அப்புறப்படுத்தியுள்ளனர். தனது தாய் இறந்துவிட்டது கூட தெரியாமல் அதனை எழுப்ப குட்டி யானை நடத்திய பாச போராட்டம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

SHARE