பிடல் காஸ்ட்ரோ காலமானார் – 9 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

247

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார், அவருக்கு வயது 90.

உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிடல் காஸ்ட்ரோ, வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.

இந்த தகவலை அவரது சகோதரரும், கியூபாவின் ஜனாதிபதியுமான ரால் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

1959 முதல் 1976ம் ஆம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராக இருந்தவர் பிடல் காஸ்ட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.

9 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

பிடல் காஸ்ட்ரோவின் மரணத்திற்கு 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது கியூபா அரசு. அவரது இறுதிச்சடங்கு டிசம்பர் 4ம் திகதி ஞாயிறன்று நடைபெறும் என்ற அவரது சகோதரரும் கியூபா ஜனாதிபதியுமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

இன்று முதல் கியூபாவில் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுவதால் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் மற்றும் அனைத்து அரசு நிகழ்வுகளும் ரத்து செய்யப்படும்.

யார் இந்த பிடல் காஸ்ட்ரோ?

ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி 1926ம் ஆண்டு கியூபாவில் ஒரு செல்வ செழிப்பான விவசாய தந்தைக்கு பிறந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ.

என்ன தான் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கியூபா மக்களின் நிலையை கண்டு தனது வசதியான வாழ்க்கையை துறந்து மக்களுக்காக போராடியவர்.

அமெரிக்கா தனது ஏகாபத்திய கொள்கையின் மூலம் கியூபாவில் தனது கொடியை நிலைநாட்டி இருந்தது.

அமெரிக்காவின் பல முதலாளிகள் கியூபா அரசின் துணையுடன் கியூபாவின் செல்வத்தை சுரண்டிக் கொண்டிருந்தனர்.

இதனை கண்டு கொதித்தெழுந்த பிடல் காஸ்ட்ரோ, அரசுக்கு எதிராக போராட ஆரம்பித்தார்.

கல்லூரி காலங்கிலேயே கம்யூனிய கட்சியில் இணைந்து கொண்டு பல போராட்டங்களை முன்னெடுத்தார்.

தொடர் போராட்டத்தின் விளைவாக 1959ம் ஆண்டு புல்ஜென்சியோ பாட்டிட்ஸ்டாவின் ஆட்சியை வீழ்த்தி தலைமை அமைச்சராக பொறுப்பேற்றார்.

1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் 1976 முதல் 2008ம் ஆண்டு வரை கியூபாவின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

இதனால் கடும் கோபம் கொண்ட அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்தது.

எனினும் கியூபாவுக்கு கைகொடுத்து அந்நாட்டு பொருட்களை ரஷ்யா இறக்குமதி செய்தது.

கியூபா மக்களும் கடுமையாக உழைத்தனர், இதன் விளைவாக பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய திட்டமிட்டு தோல்வியிலேயே முடிந்தது, ஒருமுறை, இருமுறை அல்ல மொத்தம் 638 தடவைகள்.

இவ்வாறு அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பிடல் காஸ்ட்ரோ இன்று 90 வது வயதில் இயற்கை மரணம் எய்தினார்.

SHARE