இன்று தீவிரவாத தாக்குதல்கள், துப்பாக்கி சூடு, வெடிகுண்டு கலாசாரம் என ரத்த பூமியாக இருக்கும் ஆப்கானிஸ்தான், 1969 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் அமைதி பூங்காவாக இருந்துள்ளதற்கான பசுமையான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Pommery hitchhiked தன் பணி விடயமாக ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இருமுறை 1969 மற்றும் 1974ம் ஆண்டுகளில் சென்ற நினைவுகளை பற்றி தான் எடுத்த புகைப்படத்துடன் கூறுகிறார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான கபூல் அப்போது அவ்வளவு அழகாக இருக்கும்.
அங்குள்ள புகழ்பெற்ற ஸ்பின்சர் ஹொட்டல் தெரு எப்போதும் ஜன நெருக்கடியுடன் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும்.
குதிரை வண்டி சவாரிகள் அங்கு அப்போது மிக பிரபலம். பலரும் அதில் பயணம் செய்வதை நான் அங்கு சென்ற போது பார்த்துள்ளேன்.
அதே போல நிறைய மக்கள் அங்கு துணி நெய்தல் தொழிலையும், தள்ளு வண்டி இழுக்கும் தொழிலையும் விரும்பி அப்போது செய்து வந்தார்கள் என கூறிய Pommery இப்போது போல இல்லாமல் சிறுவர்கள் சாலையில் சந்தோஷமாக விளையாடுவதை அப்போது அதிகம் காண முடியும் என கூறுகிறார்.
மேலும், அங்கு அப்போது வீடுகள் எல்லாம் 6000 அடி உயரத்தில் மரகுடிசையால் செய்யப்பட்டதாக இருக்கும். அதே போல ஆப்கானிஸ்தானில் உள்ள நியூரிஸ்டான் மாகாணமும் பார்க்க அருமையாக இருக்கும்.
அப்போது அங்குள்ள மக்கள் சூரியன் உச்சியில் இருக்கும் போது கூட வெளியில் படுத்தே ஓய்வெடுப்பதை நான் பார்த்துள்ளேன்.
அப்போது வசித்த மக்களெல்லாம் மிகவும் அன்பானவர்கள். வெளியூர்காரனான என்னையும் என் நண்பர்களை அருமையாக அவர்கள் உபசரித்தார்கள்.
அந்த ஊர் மக்கள் தங்கள் வாகனமாக மிதிவண்டியை அதிகம் உபயோகபடுத்தினார்கள்.
அதே போல ஆப்கானிஸ்தானின் பாமியன் மாகாணத்துக்கும் நான் சென்றுள்ளேன். அங்கிருந்த 170 அடி உயர் புத்தர் சிலையை பார்த்ததை என்னால் மறக்க முடியாது என கூறிய அவர் தலிபான் தீவிரவாதிகள் அதை 2001 இடித்து தள்ளியதை நினைவு கூறுகிறார்.
!