சீனாவில் 21 ஆண்டுகளுக்கு முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வாலிபர் ஒருவருக்கு தற்போது அந்நாட்டு நீதிமன்றம் நிரபராதி என தீர்ப்பு வழங்கியுள்ளது.
சீனாவின் ஹெபே மாகாணத்தை சேர்ந்தவர் நியேஷுபின் (20). இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, கொலை செய்துவிட்டதாக கூறி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின் அவ்வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது, நீதிமன்றமோ இவரை குற்றவாளி என கூறி தீர்ப்பு வழங்கியது. அதனால் அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
மரணதண்டனை என்றால் கழுத்தில் கயிற்றை நிறைவேற்றாமல், பொலிசாரால் அவரை சுட்டுக் கொலை செய்து தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். இது அவருடைய பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி அவ்வழக்கின் போது அவர் குடும்பத்தார் தன் மகன் குற்றவாளி இல்லை அவன் ஒரு நிரபராதி என கூறியும், அதற்கான தகுந்த ஆதாரம் இல்லாததால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடையவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் தானே கொலை குற்றவாளி என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நியே ஷுபின் நிரபராதி என தீர்ப்பளித்ததுள்ளது.
இதனால் அவர் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியது. அதனால் எந்தவித பயனும் இல்லை.
ஏனெனில் நிரபராதியான அவர் ஏற்கனவே சுட்டுக்கொல்லப்பட்டு விட்டாரே என குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறிய காட்சி கூறுவதற்கு வார்த்தை இல்லை.