‘இருட்டறை மெழுகுவர்த்தி’ கவிதைத் தொகுப்பு வெளியீடு

283

வவுனியா ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் நேற்று(04) ஊடகவியலாளர் எஸ்.எம்.சர்ஜான் எழுதிய ‘இருட்டறை மெழுகுவர்த்தி’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு செட்டிகுளம் பிரதேச கலாச்சார பேரவையின் ஏற்பாட்டில் வெண்கல செட்டிகுளம் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

ஆண்டியாபுளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எம்.சர்ஜான் தனது ஊரில் தனது பாடசாலையில் வைத்து இந்த நூலினை வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், பிரதியமைச்சர் அமீர் அலி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாகாணசபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா, அயூப் அஸ்மின் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும்கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இதன்போது சர்ஜான் எழுதிய பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90-5 625-0-560-320-160-600-053-800-668-160-90-6 625-0-560-320-160-600-053-800-668-160-90

 

 

 

 

 

SHARE