போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு…!

223

625-590-560-350-160-300-053-800-944-160-90

தமிழக முதலமைச்சர் தனது 68வது வயதில் இன்று இரவு 11.50 மணிக்கு காலமானார் என்று அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்படுகிறது. இதனால் அவரது உடல் ராஜாஜி மண்டபத்துக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

முன்னதாக போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் முதல்வரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இதற்காக ஜெயலலிதா வழக்கமாக பயன்படுத்தும் கார் அப்பல்லோ வைத்தியசாலை வளாகத்தில் தயார் நிலையில் இருப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஜெயலலிதாவின் வாகனத்திற்கு முன் செல்லும் பைலட் கார் மற்றும் சில சொகுசு கார்களும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

SHARE