முதல்வர் செவ்வி ஜெயலலிதாவுக்கு தினப்புயல் ஊடக நிறுவனம் ஆழ்ந்த இறுதி வணக்கத்தை தெரிவிக்கின்றது !
இந்திய அரசியலில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை அன்னை இந்திராகாந்திக்கு அடுத்து தமது வெற்றிகள் மற்றும் சாதனைகள் மூலம் நிரூபித்த தலைவர் ஜெயலலிதா. எந்த பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்து வியக்கத்தக்க வெற்றிகளைக் குவித்தவர் ஜெயலலிதா. ஆணாதிக்கம் நிறைந்த தமிழக அரசியலில் பெண்களால் சாதனைகளை படைக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் ஜெயலலிதா. ஜெயலலிதா அறிவுக்கூர்மையும், எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒருமுறை கூறியவுடன் அதை முழுமையாக புரிந்து கொள்ளும் திறனும் பெற்றவர். ஜெயலலிதாவின் மறைவு முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கின்றது !