ஜெயலலிதாவின் மரணத்தில் 15 மர்மங்கள்! தமிழக மக்களே ஏமாற வேண்டாம்!

275

 

 01- மிக நன்றாக இருந்தவர் 2மாதங்களுக்கு முன்பு திடீரென இரவோடு இரவாக மருத்துவமனையில் மர்மமாக அனுமதி.

sasikala-family-near-with-jayalalithaa-body-ministers-are_secvpf

 02- சாதாரண காய்ச்சல் தான் 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்.

 03- தினம், தினம், ஒவ்வொரு நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக மாறி, மாறி அறிவிப்பு.

 04- 3மாதம் ஆனபோதும் கூட எவரையும் பார்க்க கடைசிவரை அனுமதிக்கவில்லை.
இது யாருடைய உத்தரவு??

 05- 3மாதம், கட்சி , மற்றும் அரசு யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கியது?

06- அனைத்து ம் சரியாகிவிட்டது சராசரி உணவை சாப்பிட தொடங்கி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார் 2நாளில் நலமுடன் வீடு திரும்பவுள்ளார் என்று சொன்னீர்களே…??

07- கடைசி வரை சிகிச்சை எடுக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லையே ஏன்?

08- இறப்பதற்கு முன்பே தமிழகம் முழுவதும் உள்ள எல்லா அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு உடனடியாக ஒன்று கூடி புதிய முதல்வரை தேர்வு செய்தனர்.

09-அமைச்சர்களும் எந்த குழப்பமின்றி இலாகா நியமிக்கப்பட்டு உடனடியாக எப்படி பதவியேற்க முடிந்தது?

10- ரத்த உறவான அவரது அண்ணன் மகளை கூட மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் மிரட்டி வீட்டுக்கு செல்ல சொன்ன காரணம் என்ன?

11- தந்தி டிவி மரணத்தை முன் கூட்டியே அறிவித்ததும், அதை உடனே திரும்பபெற்றதும் யாரால், ஏன்?

12- இறந்து அரை மணி நேரம் கூட ஆகாத இந்த துக்கத்திலும் இவ்வளவு தெளிவாக ஆளுநரை சந்தித்து முதல்வராக பதவியேற்பு நிகழ்சி நடத்தியது எப்படி ?

13- கைது நேரத்தில் பேச முடியாமல் குழுங்கி குழுங்கி அழுது கொண்டே உறுதிமொழியை பாதியிலேயே நிறுத்திவிட்டு பதவியேற்ற நீங்கள் தற்போது சிறப்பாக அழுகையின்றி உறுதி மொழி எடுக்க எவ்வாறு முடிந்தது??

14-காலையில் இருந்து இந்த இரவு் வரையும் கூட மருத்துவமனை முன்பாக பட்டினியாக அழுது உருண்டு கிடப்பதில் பஞ்சபராரி பாமர மக்களை தவிர ஒரு பண முதலை கூட தென்படவில்லையே எப்படி.??

15- இன்னும் கேள்விகள் ஆயிரம் உள்ளது எனது சார்பில் அல்ல..
முதல்வர் மீது மாசில்லா அன்பு கொண்டு வாக்களித்த எம் வெள்ளந்தி பாமர தமிழ்மக்கள சார்பாக.

சொட்டு கண்ணீர் வடிக்க ஆளில்லை அருகில்……

கண்ணீர் வடிப்பவர்களுக்கு இடமில்லை அருகில்……..

ஆதாயமடைந்தவன் எவனும் அழவில்லை…….

அழுபவன் யாரும் ஆதாயமடைந்தவனல்ல….

மீண்டும் வந்துவிடுவார் என்ற பயத்தினால் நேற்றுவரை அழுதார்கள்……

மீண்டு வரமாட்டார் என்ற தைரியத்தில் அழவில்லை ஒருவரும்………

SHARE