வட மாகாணத்தில் மூன்றில் இரண்டு கடலோர பகுதிகள் பாதுகாப்பு படையினரின் வசம் ஆனந்தி சசிதரன்!!

233

 

 வட மாகாணத்தில் மூன்றில் இரண்டு கடலோர பகுதிகள் பாதுகாப்பு படையினரின் வசம் ஆனந்தி சசிதரன்!!
unnamed-1 unnamed-2 unnamed
இயற்க்கைஅநர்த்தத்தாலும்இனப்பப்பிரச்சனையாலும் நீண்ட வரலாறு கொண்ட சமுகமாகத்தான் எமது மீனவ விவசாய சமுகம் இருக்கின்றது என்று வடமாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார் .
நேற்று முன்தினம் நீர்கொழும்பு மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் 20 வது ஆண்டு நிறைவு விழாவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
 இன்று வரை மீனவர்களுடைய அடிப்படை பிரச்சனைகள் கூட தீர்க்கப்படாமல் இன்றும் உயிர் ஆபத்துகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் தான் மீனவர்களுடைய வாழ்வாதாரம் போய்க்கொண்டு இருக்கின்றத்து.
இன்று வடமாகாணத்தை பொறுத்தவரையில்  3ல் இரண்டு பங்கு கடலோர பகுதிகள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது .
எந்த ஒரு அரசும் ஆட்சிக்கு  வந்தாலும் தீர்க்கப் பட வேண்டிய இந்த  தேசிய இனப் பிரச்சனை தீர்க்கப்படாமலே இழுத்தடிக்கப் பட்டு கொண்டே  இருக்கின்றது.
உண்மையிலே இந்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமானது மிகவும் பலம்வாய்ந்த ஒரு அமைப்பு இதன் மூலம் மீனவர்களுடைய  பல பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்பட  வாய்ப்புகள் உண்டு என நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
SHARE