மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி வீதிய

240

 

மட்டக்களப்பில் இடம்பெற்ற சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள, தன்னை அனுமதிக்காமைக்கு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி வீதியில் படுத்திருந்து மறியல் போராட்டம்:

மட்டக்களப்பில் இடம்பெற்ற சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள, தன்னை அனுமதிக்காமைக்கு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
நேற்று (ஒக்04) மட்டக்களப்பு நகரிற்கு விஜயம் செய்த பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்ட நீதி அமைச்சின் முக்கியஸ்த்தர்கள் நீதிமன்றக் கட்டடத் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இதன்போது தமது சமய சடங்குகளுக்காக கொழும்பில் இருந்து பௌத்த பிக்கு ஒருவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும் மட்டக்களப்பில் நீண்ட காலமாக மங்களராமய விஹாரையின் பிரதம குருவாக உள்ள சுமணரத்ன தேரருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்துடன் நிகழ்வை பார்வையிடச் சென்ற அவருக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சுமணரத்ன தேரர் தன்னை பொதுமகன் என்ற வகையிலாவது நிகழ்வைப் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என வாதாடியுள்ளார். எனினும் நிகழ்வுக்கு அழைப்பிதழ் வழங்கப்படாதவர்களை அனுமதிக்க முடியாதென பாதுகாப்பு தரப்பினர் மறுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நகரின் மணிக்கூட்டுச் சந்தி வீதியில்  அம்பிட்டியே சுமணரத்ன தேரர் படுத்திருந்து மறியல் போராட்டத்தை நடத்தி உள்ளார்.

யவின் விஹாராதிபதியான அம்பிட்டியே சுமணரத்ன தேரர நீண்டகாலமாக மட்டக்களப்பில் வசிக்கின்றார். தமிழை நன்கு பேசக்கூடிய இவர் தமிழ்மக்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளார்.  இதனால் இவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என பெரும்பான்மையின கடும்போக்காளர்களால் முத்திரை குத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE