தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரம்-முடிந்தால் இலங்கை அரசு இதனை பிழை என நிரூபித்துக்காட்டலாம் தினப்புயல் ஊடகம் சவால்

502

 

 2-1-768x410-1 unnamed-4

 

ltte-tc-prabaharan_05பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும். புலிகள் மேலான எந்த குற்றச்சாட்டையும், ஒரு நாட்டின் சட்டத்தின் எல்லைக்குள் விசாரணை செய்யமுடியும்;. இதன் மூலம் தண்டிக்கவும் முடியும். இதற்கு சட்டங்கள் வைத்திருக்கின்றவர்கள் தான், சரணடைந்த பிரபாரகரனை காட்டுமிராண்டித்தனமாக கொன்றனர். அவனின் உடலைக் கூட பலவிதமான இழிவுக்குள்ளாக்கி அவமானப்படுத்தினர். இவை எல்லாம் போர்க்குற்றங்கள் தான். இறந்த உடலை அவமானப்படுத்துவது கூட குற்றம் தான். யுத்தத்தில் இறந்த உடலை அவமானப்படுத்து, போர்க்குற்றம்.

அதுவும் இனத்துக்காக போராடிய தலைவன் ஒருவனை இப்படிச் செய்வது, இனவிரோதக் குற்றமாகும். இதை சர்வதேச சட்டங்கள் கூட வரையறுக்கின்றது. ஆனால் பேரினவாத பாசிச பயங்கரவாதமோ, இதை உலகறிய காட்சிப்படுத்துகின்றது. இதற்குள் சிங்களப் பேரினவாதம் தம் போர்க்குற்றங்களை உலகறியக் கூடாது என்பதற்காக, பிரபாகரன் எப்படி சாகடிக்கப்பட்டான் என்பதை மறைக்க தலைக்கு துணி போட்டனர். எப்படிப்பட்ட மரணம் என்பதை, குற்றத்தின் முழுத் தன்மையை எடுத்துக் காட்டும் வண்ணம் படத்தை இணைத்துள்ளோம். எப்படி பிரபாகரன் கொல்லப்பட்டான் என்பதை, இது எடுத்துக் காட்டுகின்றது.

அவர் மோதலில் சாகவில்லை என்பதையும், மூன்றாம் தரப்பிடம் சரணடைந்த பிரபாகரனை, மூன்றாம் தரப்பின் துணையுடன் எப்படி பேரினவாத பாசிட்டுகள் உயிருடன் சிதைத்தனர் என்பதை இந்தப் படம் எடுத்துக் காட்டுகின்றது. இங்கு இணைக்கப்பட்டுள்ள மற்றைய படங்கள், அரச பேரினவாதிகள் இறந்த உடலை அவமானப்படுத்தும் வக்கிரத்தை எடுத்துக் காட்டுகின்றது.

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம். இதே அவமானத்தைத்தான் பிரபாகரன் உடல் சந்திக்கின்றது. இறந்த உடலுக்கு கோமணம் கட்டி மகிழ்கின்ற பேரினவாத அதிகார வர்க்கம், தமிழனுக்கு கோமணம் கட்டிய வக்கிரத்துடன் அனைத்தும் நடந்தேறியுள்ளது.

பிரபாகரன் உடல் பலவிதமாக சிதைக்கப்படுகின்றது. முதலில் அரசு காட்டிய படம், அடித்து வீங்கிச் சிதைந்து போன முகம் தான். இறந்த பெண்ணின் உடலை மேய்ந்த அதே வக்கிரம் தான் இங்கும். பிரபாகரன் உடல் மேல் வன்முறைகள், எதிர்காலத்தில் காட்சிகளாக கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இங்கு குற்றங்கள் பல. பிரபாகரனின் வெறும் உடலுக்கு அப்பால், மூன்றாம் தரப்பிடம் நம்பி சரணடைந்த ஒருவனுக்கு நடந்த கதையிது. அவனை சித்திரவதை செய்து கொன்ற உண்மையை, இங்கு பளிச்சென்று இந்தப் படம் எடுத்துக் காட்டுகின்றது. போர்க் குற்றத்தின் முழுப் பரிமாணத்துடன், இது அரங்கேறியுள்ளது.

வெளிநாட்டு புலித்தலைமை தன் குற்றத்தை மறைக்க வீரமரணம் என்று ஒருபுறம் சொல்லியும், இல்லை உயிருடன் உள்ளார் என்று ஏனையோர் சொல்லியும், தன் தலைவன் மேலான இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக உள்ளனர். பிரபாகரனை சரணடைய வைக்க தாம் மூன்றாம் தரப்பு ஊடாக நடத்திய காட்டிக் கொடுப்பை மூடிமறைக்க இந்தப் போர்க்குற்றமே இவர்களால் மூடிமறைக்கப்படுகின்றது.

இந்த உடல் பிரபாகரனுடையதல்ல என்றதன் மூலம், பேரினவாதம் செய்த இழிவையும் இந்த படுகொலையையும் கூட மறுக்கின்றனர். உண்மையில் பிரபாகரனை மூன்றாம் தரப்பிடம் சரணடைய வைத்து, அதன் மூலம் தாங்கள் காட்டிக்கொடுத்த இந்தச் சதியை மூடிமறைக்கின்றனர்.

இதன் மூலம் தமிழன் தலைவனாக தமிழ்மக்களால் கருதப்பட்ட ஒருவன் மேல் நிகழ்ந்த போர்க்குற்றத்தின் தன்மையையே, இவர்கள் இல்லாததாக்குகின்றனர். இப்படி பேரினவாத அரசுக்கு அவர்கள் மேலும் துணை போகின்றனர். அரசின் குற்றத்துக்கு பின்னால், அதற்கு உடந்தையாகி நிற்கின்றனர்.

 

பெரும்பான்மைத் தமிழ்மக்களை அவமானப்படுத்திய பேரினவாத அசிங்கத்தை வெளிப்படுத்தாது, தம் குற்றத்தை மூடிமறைக்க காட்டிக் கொடுக்கப்படுகின்றது.

மறுபக்கத்தில் துரோகக் குழுக்கள், இந்த போர்க்குற்றத்தின் பின் இருந்துள்ளனர். பிரபாகரனை மோசடி மூலம் மூன்றாம் தரப்பிடம் சரணடைய வைத்துக் கொன்றவர்கள் தான், படத்தை பெருமையுடன் வெளியிட்டார்கள். வேறு யாருமல்ல இந்தியாவில் றோவின் கூலிப்படையாக இருக்கும் ஈ.என்.டி.எல்.எவ் இணையம் இந்தப் படத்தை வெளியிட்டவுடனேயே, சிறிது நேரத்தில் அதை அகற்றியிருந்தனர். குற்றவாளிகள் தம் குற்றத்தை முழுமையாக மறைக்க எடுத்த எச்சரிக்கை நடவடிக்கை, இந்தப் படத்தை அவர்களை உடனேயும் அகற்ற வைத்துள்ளது. இப்படி இந்த போர்க் குற்றத்தில் இந்திய, இலங்கை கூலிக்குழுக்களும் இணைந்தே பங்காற்றியுள்ளது. அரசுடன் இயங்கும் கருணா முன்னிலையில், மூன்றுவிதமான உடல் சார் காட்சிகளை நாம் காணமுடியும்.

இப்படி போர்க்குற்றத்தின் முழுப் பரிமாணத்தில், அனைத்து பாசிட்டுகளும் ஈடுபட்டுள்ளனர். புலம்பெயர் புலியெதிர்ப்பு ஜனநாயகவாதிகளின் துணையுடனேயே இந்தக் குற்றம் இன்று பாதுகாக்கப்படுகின்றது. இறந்த உடல் மேல் நடத்திய இழிவு, சரணடைந்த அவரைக் கொன்ற விதம், இந்த “ஜனநாயகத்துக்கு” ஏற்புடையதாக உள்ளது. இதுதான் அவர்கள் பேசும் ஜனநாயகம். இதுபோன்ற செயலை புலிகள் செய்தாலும் சரி, அரசு செய்;தாலும் சரி, அனைத்தும் மக்களுக்கு எதிரானவை தான்.

அந்தவகையில் நாம் மக்களுக்காக போராட வேண்டியுள்ளது. அனைத்து மக்கள் விரோதிகளையும், நாம் இனம் காணவேண்டிய காலமிது.

தேசிய தலைவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரம் ..! ஜெகன் மாஸ்ரரின் தட்டு இலக்கம் தான் 0.0001 இவர் தான் தலைவரது பாதுகாப்பு அணிக்கான சாரதிகளை உருவாக்குபவர். தலைவர் தகடு அணிவதில்லை

தேசிய தலைவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரம் ..! ஜெகன் மாஸ்ரரின் தட்டு இலக்கம் தான் 0.0001 இவர் தான் தலைவரது பாதுகாப்பு அணிக்கான சாரதிகளை உருவாக்குபவர். தலைவர் தகடு அணிவதில்லை

உண்மை தகவல் : இறந்து போன சிங்கள ராணுவ வீரனின் உடலை தலைவர் பிரபாகரன் உடல் என்று ஏமாற்றிய இந்திய மற்றும் இலங்கை அரசுகள், அண்ணனது இருப்பை மறுக்கப் படாத பாடுபடும் சிங்கள அடிவருடிகளிடம் ஒரு கேள்வி? முள்ளிவாய்க்காலில் யாரோ ஒரு வீரனின் உடலைக்காட்டி தலைவன் என்றீர்கள்??

தலைவரின் உடலை புகைப்படம் எடுக்க செய்தியாளர்களுக்கு அனுமதி தராமல் ராணுவ வீரர்கள் எடுத்த புகைப்படத்தை மட்டும் வெளியிட்டது ஏன் ? அவசர அவசரமாக அந்த உடலை எரித்தது ஏன் ?
தலைவர் இறந்துவிட்டார் என்றால் விடுதலைபுலிகள் மீதான தடையை இதுவரை நீக்காதது ஏன் ?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து இந்திய நீக்காதது ஏன் ?தகட்டு எண்ணையும் (0.001) போட்டுக்காட்டினீர்கள். அருகில் அவரது கைத்துப்பாக்கி இருந்தது என (CZ-100)வகை கைத்துப்பாக்கியையும் காட்டினீர்கள். முட்டாள்களே…. பொய் புனைவது என்றாலும் ஓரளவு ஆராய்ந்து கூறவேண்டும் . கருணாவை வைத்து நிறுவினால் அனைத்தும் சரியாக இருக்குமென பொய்க் கணக்கு போட்ட சிங்களமே. தலைவன் அருகே குறைந்தது ஓரிரு மணித்துளிகள் தான் கருணா இருந்திருப்பான் வருடக்கணக்கில் அவரருகே இருந்தவர்களை வைத்து நிறுவ முற்ப்பட்டிருந்தால் முகத்தில் ஈ ஆடியிருக்காது உங்களிற்கு.
0.0001 என்ற இலக்கத்திற்கு உடையவார் தற்ப்போது பாதுகாப்பாக இருப்பதனால் தான் இந்த பதிவை நிறுவுகின்றேன். ஜெகன் மாஸ்ரரின் தட்டு இலக்கம் தான் 0.0001 இவர் தான் தலைவரது பாதுகாப்பு அணிக்கான சாரதிகளை உருவாக்குபவர். தலைவர் தகடு அணிவதில்லை என்பது கூட துரோகி கருணாவிற்கு தெரியவில்லை அந்தளவிற்கு தலைவனை நெருங்க வாய்ப்பில்லை அவனுக்கு.
CZ-100 வகை கைத்துப்பாக்கிகளை மெய்ப்பாதுகாவலர் அணியினர்கூட பயன்படுத்துவதில்லை. 2000 ஆண்டிற்கு பின்னர் சிறப்புத்தளபதிகள் கூட பயன்படுத்துவதில்லை. துறைசார் பொறுப்பாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் தான் பயன்படுத்தினார்கள்.
ஏன் கருணாகூட அதைத்தான் பயன்படுத்தியிருந்தான் (எத்தனை தடவை அதனை வாங்கி வைத்த பின்னரே தலைவனை சந்திக்க அனுமதித்திருப்போம்) இன்றுவரைக்கும் நம்பத்தகுந்த சாட்சியங்களை முன்வைக்க தடுமாறும் சிங்களமே, கூடவே துதிபாடும் அடிவருடிகளே… தலைவன் நிழலை கூடவே தொட இயலாத நீங்களா தலைவனது இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்திருப்பீர்கள்.“ கேட்கிறவன் கேனையன் என்றால் எலி ஏறோபிளேன் ஓடு்ம் என்பானாம்” என்ற கதையாய் இருக்கு. சிங்கள ராணுவமே!!

இராணுவதரப்பு காட்டிய துப்பாக்கி   

img_0233-2

தேசியத்தலைவர் இறுதியாக பாவித்த கைத்துப்பாக்கி    

585897170e522e346ac429dd5885308a86812169

ltteprabahranbody-001ltteprabahranbody-002ltte-tc-prabaharan_02ltte-tc-prabaharan_03ltte-tc-prabaharan_04ltte-tc-prabaharan_06ltte-tc-prabaharan_05ltte-tc-prabaharan_07ltte-tc-prabaharan_08ltte-tc-prabaharan_09ltte-tc-prabaharan_10ltte-tc-prabaharan_11lttepiraba-deadbody

SHARE