போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து சசிகலா வெளியேறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சொத்து உரிமை யாருக்குச் செல்லும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து சசிகலா வெளியேறப் போவதாக வெளிவந்துள்ள தகவல் எல்லோருக்கும் கவலையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், போயஸ் கார்டன் வீட்டை அம்மா நினைவகம் என பெயர் மாற்றி ஜெயலலிதாவின் நினைவகமாக மாற்றவுள்ளார்களாம்.
இந்த யோசனை குறித்தான சட்ட ஆலோசனைகள் பெற்று வருவதாகவும், சிக்கல்கள் எதுவும் இல்லை எனில் விரைவில் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.